Kathir News
Begin typing your search above and press return to search.

டிசம்பர் 7 திருச்செந்தூரில் ஆரவாரத்துடன் வேல் யாத்திரை நிறைவு: ம.பி முதல்வர் பங்கேற்பு - பா.ஜ.க-வினர் உற்சாகம்!

டிசம்பர் 7 திருச்செந்தூரில் ஆரவாரத்துடன் வேல் யாத்திரை நிறைவு: ம.பி முதல்வர் பங்கேற்பு - பா.ஜ.க-வினர் உற்சாகம்!

டிசம்பர் 7 திருச்செந்தூரில் ஆரவாரத்துடன் வேல் யாத்திரை நிறைவு: ம.பி முதல்வர் பங்கேற்பு - பா.ஜ.க-வினர் உற்சாகம்!

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  1 Dec 2020 6:56 PM GMT

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிவேல் யாத்திரை கடந்த மாதம் 6ந் தேதி அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தொடங்கியது. தொடர்ந்து மேற்கு, வடக்கு மாவட்டங்களில் வெற்றிவேல் யாத்திரை மிகச்சிறப்பாக நடைபெற்றது. யாத்திரை சென்ற இடங்களிலெல்லாம் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு தங்களின் அமோக ஆதரவை அளித்தனர்.

இடையில் ஏற்பட்ட நிவர் புயல் காரணமாகவும், அதன் மீட்பு பணிகளில் பாஜக நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் என்பதற்காகவும் வெற்றிவேல் யாத்திரை நிறுத்தப்பட்டது.

நிவாரணப் பணிகள் காரணமாக யாத்திரை ரத்து செய்யப்பட்ட அறுபடை வீடுகளான சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை மற்றும் திருப்பரங்குன்றம் கோவில்களில் 5-ஆம் தேதியன்று முருகனை தரிசித்து, 7-ஆம் தேதியன்று யாத்திரை நிறைவு நிகழ்ச்சி திருச்செந்தூரில் நடக்க இருக்கிறது.

யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் மத்தியபிரதேச முதல்வர் திரு.சிவராஜ் சிங் சௌகான் அவர்களும், உடன் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளரும் அகில பாரத பொது செயலாளருமான திரு.CT. ரவி அவர்களும், தமிழக இணை பொறுப்பாளர் திரு.சுதாகர் ரெட்டி அவர்களும், மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

தமிழ்நாடு முழுவதிலிமிருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பெருந்திரளான எண்ணிக்கையில் அவர்களது குடும்பத்துடன் வருகை தர இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியையொட்டி திருச்செந்தூர் முழுவதும் விழாக்கோலமாய் காட்சி அளிக்க உள்ளது.

07.12.2020 அன்று காலை 11.00 மணிக்கு நிறைவு விழா நிகழ்ச்சிகள் இனிதே தொடங்க இருக்கிறது என்றும் இந்நிகழ்ச்சியை முன்னிட்டு தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை மீண்டும் தமிழக பாஜகவினரிடையே ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News