வந்தே பாரத் திட்டம்: இதுவரை சுமார் 29 லட்சத்து 23 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.!
வந்தே பாரத் திட்டம்: இதுவரை சுமார் 29 லட்சத்து 23 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.!

By : Kathir Webdesk
வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் வேலைக்காக வெளிநாடுகள் சென்றிருந்த இந்தியர்கள் வேலை இழந்ததுடன், வருமானத்தையும் இழந்து தாய் நாட்டுக்கு வரமுடியாமல் தவித்தனர்.
இந்நிலையில் வந்தே பாரத் என்கிற திட்டத்துடன் பிரதமர் நரேந்திரமோடி அரசு ஒரு சிறப்பு திட்டத்தை தொடங்கியது. இதன் மூலம் வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இந்தியர்கள் இலட்சக் கணக்கானவர்களை அயலுறவுத்துறை அமைச்சகம் விமானம், கப்பல் மூலம் மீட்டு வந்தது. இதில் பலர் கொரோனா நோய் தொற்று உள்ளவர்கள்.
அவர்களை விமான நிலையத்தில் பரிசோதித்து சிறப்பு மருத்துவமனை முகாம்களில் சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களை தனிமைப் படுத்தி அவர்களை கண்காணித்து நோய் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது.
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வந்தே பாரத் மிஷன் மூலம் கடந்த மே மாதம் முதல் 7 கட்டங்களாக உலகின் பல்வேறு நாடுகளுக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.
இந்நிலையில் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்திப்சிங் பூரி கூறுகையில், ' சென்ற நவம்பர் மாதம் நான்காம் தேதி மட்டும் ஒரே நாளில் மட்டும் ஷார்ஜா, லண்டன், பிராங்பேர்ட் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்த 5,362 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
இதுவரை 7 கட்டங்களாக இயக்கப்பட்ட சிறப்பு விமானங்கள் மூலம் சுமார் 29 லட்சத்து 23 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர் என கூறியுள்ளார்.
