வாரணாசியில் 100 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட அன்னபூரணி சிலை கனடாவில் மீட்பு!
வாரணாசியில் இருந்து 100 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டத்தப்பட்ட அன்னபூரணி சிலை தற்போது கனடாவில் மீட்கப்பட்டுள்ளதால் இந்துக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.
By : Thangavelu
வாரணாசியில் இருந்து 100 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டத்தப்பட்ட அன்னபூரணி சிலை தற்போது கனடாவில் மீட்கப்பட்டுள்ளதால் இந்துக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்தியாவில் உள்ள பழங்கால கோயில் சிலைகள் மன்னர் காலத்தின்போது வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டது. தற்போது பாஜக ஆட்சி அமைந்த பின்னர் ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் சிலைகள் மீட்கப்பட்டு மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது.
அதே போன்று தற்போது ஒரு சிலை மீட்கப்பட்டுள்ளது. அதாவாது உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்ட அன்னபூரணயின் சிலை ஒன்று கனடாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த சிலை வருகின்ற 15ம் தேதி மீண்டும் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. கடத்தப்பட்ட சிலை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் மத்திய அரசு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Polimer