Kathir News
Begin typing your search above and press return to search.

நவராத்திரி குறித்து சர்ச்சை கருத்து: வாரணாசி பல்கலைக்கழக பேராசிரியர் பணி நீக்கம்!

நவராத்திரி குறித்து கருத்து தெரிவித்த வாரணாசி பல்கலைக்கழக கௌரவ விரிவுரையாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நவராத்திரி குறித்து சர்ச்சை கருத்து: வாரணாசி பல்கலைக்கழக பேராசிரியர் பணி நீக்கம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Oct 2022 4:24 AM GMT

நவராத்திரி விரதம் குறித்து சமூக வலைத்தளங்களில் தற்போது சரியாக பரவி விட்ட கருத்து மூலம் கல்லூரியில் பணியாற்று வரும் கௌரவ விரிவுகளை யாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யா பீடம் தற்போது இவரை பணி நீக்கம் செய்துள்ளது. வாரணாசியில் உள்ள பல்கலைக்கழகத்தை கௌரவ விரிவுரையாளராக பணியாற்று வந்தவர் தான் மதிலேஷ்குமார் கௌதம் என்பவர். இவர்தான் தற்பொழுது நவராத்திரியின் சிறப்புகளை பற்றி சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


மாணவர்கள் குறித்த கடிதத்தின் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்று வாரணாசி பல்கலைக்கழக பதிவாளர் சுனிதா பாண்டி தெரிவித்துள்ளார். நவராத்திரியை முன்னிட்டு பெண்கள் ஒன்பது நாட்கள் விரதம் இருப்பதற்கு பதிலாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் ஹிந்து மத நடைமுறை சட்டத்தையும் படிப்பது சிறந்தது. அதன் மூலமாக வாழ்வின் பயத்திலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்து பெண்கள் விடுபட முடியும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். இவ்வாறு அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் அவர் தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பல்கலைக்கழக மாணவர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது.


இந்து மதத்திற்கு எதிராக சர்ச்சை பதிவிட்டுள்ள அவருடைய இந்த கருத்து மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, மாணவர்கள் சார்பில் கல்லூரி நிர்வாகத்தின் மீது புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது கௌரவ விரிவுரையாளராக பணியாற்றிய இவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக உத்தரவு இடப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் பல்கலைக்கழக வழக்கத்திற்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என பணி நீக்க உத்தரவில் தெரிவித்துள்ளதாகவும் மேல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

Input & Image courtesy: Dinamani News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News