எம்.பி.களின் செயலால் தூக்கம் வரவில்லை ! கண்ணீர் விட்ட வெங்கையா நாயுடு !
எதிர்க்கட்சிகளின் செயல்களால் அவையின் புனிதம் அழிக்கப்படுகிறது என்று ராஜ்யசபா தலைவரான வெங்கையா நாயுடு கண்ணீருடன் கூறியுள்ளார். கடந்த ஜூலை 19ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது முதல் பெகாசஸ் விவகாரம் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டு அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
By : Thangavelu

இதனால் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை சபை கூடியதுமே விவசாய சட்டங்களை உடனடியாக வாபஸ்பெற வேண்டும் என மேஜை மீது எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ஏறி நின்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவைத் தலைவர் வெங்கையா நாயுடு எம்.பி.க்களிடம் கீழே இறங்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் தொடர்ந்து அட்டுழியங்கள் செய்தவாறு இருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை அவை கூடியதும், வெங்கையா நாயுடு கண்ணீர் விட்டு பேசினார். நேற்றைய தினம் சில உறுப்பினர்கள் மேஜைகள் மீது அமர்ந்தும், ஏறியும் அவையின் புனிதத்தை அழிக்கின்ற வகையில் நடந்துள்ளனர். இது போன்ற செயல்களை நினைத்து இரவில் தூங்க முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Source: Dinamalar
Image Courtesy: தினமலர்
https://www.dinamalar.com/news_detail.asp?id=2821054