Kathir News
Begin typing your search above and press return to search.

பீகார்: முங்கர் வன்முறையில் காவல்துறையினர் தாக்குதல் குறித்து VHP கண்டனம்.!

பீகார்: முங்கர் வன்முறையில் காவல்துறையினர் தாக்குதல் குறித்து VHP கண்டனம்.!

பீகார்: முங்கர் வன்முறையில் காவல்துறையினர் தாக்குதல் குறித்து VHP கண்டனம்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Oct 2020 2:07 AM IST

அக்டோபர் 27 இல் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு பீகாரில் உள்ள முங்கரில் நகரில் ஏற்பட்ட வன்முறையில் காவல்துறையினர் கண்மூடித்தனமாக நடந்து கொண்டதை குறித்து கடுமையான குற்றச் சாட்டுகளை அறிக்கையில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் மற்றும் நிர்வாகிகள் மீதும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் கேட்டுக்கொண்டது.

செய்திக்குறிப்பில் VHP வெளியிட்ட அறிக்கையில், "துர்கை சிலையைக் கரைக்க அமைதியாகச் சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது தேவையற்ற, தூண்டப்படாத மற்றும் கண்மூடித்தனமான லத்தி சார்ஜ் வன்முறையை ஏற்படுத்தியுள்ளது," என்று காவல்துறை மீது குற்றம் சாட்டியுள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை மீதும் மற்றும் நிர்வாக அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்தி மற்றும் அவர்களை உடனடியாக இடைநீக்கம் செய்யவேண்டும் என்றும் VHP கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது IPC பிரிவு 302 சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடர்ந்து விரைவு நீதிமன்றத்தின் மூலம் விசாரிக்கப்பட்டு தண்டனை அளிக்கவேண்டும் என்றும் கூறியிருந்தது. காவல்துறையினர் துர்கை சிலையைத் தூக்கிச் சென்ற நான்கு நம்பர்கள் மீது தாக்குதல் நடத்திய பிறகு வன்முறை எழுந்தது என்று குற்றம் சாட்டியது.

மேலும் முதலில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டது மற்றும் அதில் 18 வயதுடைய பக்தன் தலையில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர். மேலும் பக்தர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித் தனமாக லத்தியால் தாக்கிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. இந்நிலையில் காவல்துறை, சமூக விரோத செயல்களான கல் வீசுவது மற்றும் கூட்டத்தில் இருந்த ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News