Kathir News
Begin typing your search above and press return to search.

உலகளாவிய ஆசிரியருக்கான பரிசை வென்றார் கிராம சபை ஆசிரியர் ரஞ்சித்சிங் டிசாலே.!

உலகளாவிய ஆசிரியருக்கான பரிசை வென்றார் கிராம சபை ஆசிரியர் ரஞ்சித்சிங் டிசாலே.!

உலகளாவிய ஆசிரியருக்கான பரிசை வென்றார் கிராம சபை ஆசிரியர் ரஞ்சித்சிங் டிசாலே.!

Saffron MomBy : Saffron Mom

  |  4 Dec 2020 12:32 PM GMT

லண்டனில் உலகெங்கும் இருந்து தேர்ந்து ஏற்கப்பட்டு மதிப்புமிக்க உலகளாவிய ஆசியருக்கான 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகையை, மகாராஷ்டிரா சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பரிதேவாடியில் கிராம சபை ஆசிரியர் ரஞ்சித்சிங் டிசாலே வென்றுள்ளார்.

இவர் உலகெங்கும் இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 10 ஆசிரியர் பட்டியலில் புதுமையான கற்பித்தல் முறைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டிசலே, மாணவர்களுக்கு தங்கள் தாய்மொழியில் வீடியோக்கள், கதைகள், ஆடியோ கவிதைகள் மற்றும் அவர்களுக்கான பணிகளை QR கோடுகளை பாடபுத்தங்களில் பயன்படுத்தினார்.

டிசலே அந்த பள்ளி குறித்துத் தெரிவிக்கும்போது, அது பாழடைந்து ஒரு மாட்டுக் கொட்டகைக்கு அருகே இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் இந்த கிராமத்தில் பெண் குழந்தைகள் பெரும்பாலும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் சிறுவயதில் திருமணம் செய்து கொடுக்கும் வழக்கமும் வழக்கமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அங்குள்ள பாடப்புத்தங்கள் குழந்தைகளின் தாய் மொழியான கனடாவில் இல்லை என்பதையும் குறிப்பிட்டார். அவர் மிகவும் முயற்சி எடுத்து கனடாவைக் கற்றுக்கொண்டதாகவும். பின்னர் 1 முதல் 4 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளப் பாடப்புத்தங்களை கனடாவில் வடிவமைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

"இவரது முயற்சியும் பெருமளவில் வெற்றி கண்டது. அந்த கிராமத்தில் தற்போது சிறுவயதில் திருமணம் செய்து வைக்கும் வழக்கமும் கைவிடப்பட்டுள்ளது மற்றும் பள்ளியில் 100 சதவீதம் மாணவிகளின் வருகையும் உள்ளது. மாவட்டத்தில் சிறந்த பள்ளியாகவும் இந்த பள்ளி தற்போது விளங்குகின்றது. மேலும் ஒரு பெண் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். ரஞ்சித்சின் இந்த கிராமத்திற்கு வந்த போது சாத்தியமில்லாத கனவும் இப்போது நிறைவடைந்துள்ளது," என்று உலகளாவிய ஆசிரியர் பரிசின் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிசலே தனது பரிசுத் தொகையில் 50 சதவீதத்தை மீதமுள்ள 9 இறுதி போட்டியாளர்களுடன் பகிர்ந்துகொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் போரால் பாதிக்கப்பட்ட நாட்டில் உள்ள 5000 மாணவர்களிடம் புது முயற்சியை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News