குழந்தையை காப்பாற்றும்போது கிணற்றில் விழுந்த 30 பேர்.. மத்திய பிரதேசத்தில் பயங்கரம்.!
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
By : Thangavelu
மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டம் அருகே உள்ள கஞ்ச்பசோதா என்ற கிராமம். இநுத கிராமத்தை குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் கிராம மக்கள் கிணற்றின் அருகே திரண்டுள்ளனர்.
அப்போது கிணற்றின் சுற்றுச்சுவர் பாரம் தாங்கமுடியால் சரிந்து விழுந்துள்ளது. இதனால் கிணற்றின் அருகே நின்றிருந்தவர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர்கள் கிணற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
தகவலை தொடர்ந்து மீட்புக் குழுவினர் கிராமத்தில் முகாமிட்டு, கிணற்றில் தவித்து வந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். அப்போது கிணற்றில் இருந்து காயத்துடன் மீட்கப்பட்டவர்களில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், கிணற்றில் சிக்கியுள்ள 15 பேரை மீட்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.