விவசாயிகளின் வன்முறை நாட்டிற்கு வேதனை.. பிரதமர் மோடி.!
விவசாயிகளின் வன்முறை நாட்டிற்கு வேதனை.. பிரதமர் மோடி.!
By : Kathir Webdesk
‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலமாக பிரதமர் மோடி இன்று வானொலியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசும் போது, கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தின்போது தேசியக்கொடியை அவமதித்ததை பார்த்து நாட்டு மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டின் 72வது குடியரசு தினவிழாவில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியால் பல இடங்களில் குழப்பமான காட்சிகளாக காணப்பட்டது. டெல்லியில் பல இடங்களில் விவசாயிகள் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பேரணிக்கு முன்னரே விவசாய தலைவர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர். குறிப்பிட்ட இடத்தில் பேரணி நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர். ஆனால் அனுமதிக்கப்பட்ட இடத்தை விட்டு விவசாயிகள் வேறு இடத்தை நோக்கி சென்று வன்முறையில் ஈடுபட்டனர்.
சிலர் செங்கோட்டைக்குள் புகுந்து நமது நாட்டின் தேசியக்கொடியை அகற்றிவிட்டு, பிரிவினை வாதிகளின் கொடிகளை ஏற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், விவசாயத்தை நவீனமயமாக்க மத்திய அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.