Kathir News
Begin typing your search above and press return to search.

தேடப்படும் காலிஸ் தானிய பயங்கரவாதி சுக்ஹ் பிக்ரிவால் கைது!

தேடப்படும் காலிஸ் தானிய பயங்கரவாதி சுக்ஹ் பிக்ரிவால் கைது!

தேடப்படும் காலிஸ் தானிய பயங்கரவாதி சுக்ஹ் பிக்ரிவால் கைது!
X

Saffron MomBy : Saffron Mom

  |  31 Dec 2020 7:47 PM IST

டிசம்பர் 31 இல் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு தேடப்படும் முக்கிய காலிஸ் தானிய பயங்கரவாதியான சுக்ஹ் பிக்ரிவால் இந்திரா காந்தி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் துபாயில் இருந்து வியாழக்கிழமை நாடு கடத்தப் பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கைக்குப் பின்னர், பஞ்சாபில் குறிவைத்துக் கொல்லப்பட்ட சம்பவங்கள் மற்றும் காலிஸ் தானிய தீவிரவாத அமைப்பின் முக்கிய இணைப்புகளைக் கண்டறிய முடியும் என்று நம்பப்படுகின்றது. டெல்லியில் டிசம்பர் 7 இல் நடந்த முக்கிய பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய இரண்டு காலிஸ் தானிய தீவிரவாதிகள் உட்பட ஐந்து பேரைக் கைது செய்தனர். விசாரணையில் அவர்களுக்குப் பஞ்சாபில் ஷவுர்யா சக்ரா வெற்றியாளர் பலவிந்தர் சந்து கொலைக்குத் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டது.

பாகிஸ்தானின் ISI உளவுத்துறையின் அறிக்கையின் படி, காலிஸ் தானிய பயங்கரவாதி சுக்ஹ் பிக்ரிவால் தங்களை இந்த கொலை சம்பவத்துக்குப் பயன்படுத்திக் கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் பஞ்சாப் நாபாபில் 2016 இல் சிறையில் நடந்த தாக்குதலும் சுக்ஹ்கு தொடர்புண்டு என்று காவல்துறையால் சந்தேகிக்கப் படுகின்றது. அந்த சம்பவத்துக்குப் பிறகு அவர் துபாய்க்குச் சென்று விட்டார்.

கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் கொடுத்த தகவலின் பேரில், துபாயில் உள்ள இந்திய உளவுத் துறை அவர் இருப்பிடத்தைக் கண்டறிந்தது. டிசம்பர் 8 இல் அவரை துபாயில் தடுத்தனர். மேலும் பிக்ரிவால் சிவ சேனா தலைவர் ஹனி மகாஜன் மீது தாக்குதல் சம்பவம் உட்படப் பல இந்து தலைவர்கள் தாக்குதல் வழக்கில் தொடர்பில் உள்ளார். அந்த தாக்குதலில் மகாஜன் உயிர்பிழைத்தார் ஆனால் அவரது உறவினர் உயிரிழந்தார். பிக்ரிவால் துபாயில் இருந்து காலிஸ் தானிய தீவிரவாதிகள் மற்றும் ISI தீவிரவாதிகளுக்கு இடையே பாலமாகச் செயல்பட்டு வருகிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News