Kathir News
Begin typing your search above and press return to search.

2 அல்லது 4 வாரத்தில் கொரோனா 3வது அலை.. 2வது அலையை விட பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் மருத்துவக்குழு.!

எனவே 3வது அலைக்கு தற்போது இருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் மருத்துவக்குழு முதலமைச்சரிடம் கூறியுள்ளது. ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் அலை அதிகமான பாதிப்பை சந்தித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2 அல்லது 4 வாரத்தில் கொரோனா 3வது அலை.. 2வது அலையை விட பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் மருத்துவக்குழு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  18 Jun 2021 6:32 PM IST

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னும் 2 அல்லது 4 வாரத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலை தாக்கும் என்றும், 2வது அலையை விட இரண்டு மடங்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அங்கு தற்போது 2வது அலை வேகமாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலை ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. இது பற்றி மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ்தாக்கரே, மாநில மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது இன்னும் 2 அல்லது 4வது வாரத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலை தாக்கும். இது 2வது அலையை விட இரண்டு மடங்கிற்கு பாதிப்பு இருக்கும் எனவும் கூறியுள்ளனர்.

எனவே 3வது அலைக்கு தற்போது இருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் மருத்துவக்குழு முதலமைச்சரிடம் கூறியுள்ளது. ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் அலை அதிகமான பாதிப்பை சந்தித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News