'கட்சி ஆபீஸ் இருந்தாத்தானே இந்த பிரச்சினை?' - தொண்டர்களாலேயே அடித்து உடைக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம்
குஜராத் சட்டசபை தேர்தல் இன்னும் சில வாரங்கள் நடைபெற உள்ளது நிலையில் அங்குள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் காங்கிரஸ் கட்சிக்காரர்களாலே அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
By : Mohan Raj
குஜராத் சட்டசபை தேர்தல் இன்னும் சில வாரங்கள் நடைபெற உள்ளது நிலையில் அங்குள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் காங்கிரஸ் கட்சிக்காரர்களாலே அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் தற்பொழுது பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது அங்கு தற்போது பூபேந்திர பாட்டில் முதல்வராக உள்ள நிலையில் அங்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் குஜராத் ஜமால்பூர் காடியா தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ'வாக இருக்கும் இம்ரான் கெடவலாக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுபான்மையினர் அதிகமாக இருக்கும் ஜமால்பூர்-காடியா தொகுதியில் பா.ஜ.க'வின் பூஷன் பட்'டை எதிர்த்து கிளம்பி இறங்குகிறார். காங்கிரஸ் எம்.எல்.ஏ இம்ரான் கெடவாலாவிற்கு நில மாபியாக்களுடன் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே அவரை ஏற்காத காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கோபத்தில் இருந்தனர் இந்த கோபத்தின் வெளிப்பாடாக அஹமதாபாத்தில் உள்ள கட்சி தலைமையகத்தை காங்கிரஸ் தொண்டர்கள் அடித்து, உடைத்து சூறையாடினர். இந்த தொகுதியை பா.ஜ.க'விற்கு தாரை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்திலேயே மீண்டும் களமிறங்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கட்சி தொண்டர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.