வயநாடு சம்பவம் - காங்கிரஸ் கட்சியினரே காந்தியின் படத்தை உடைத்தது விசாரணையில் அம்பலம்
கேரளாவில் உள்ள வயநாட்டில் ராகுல் காந்தி அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் தற்போது அதிர்ச்சி தரும் விதமாக காங்கிரஸ் கட்சியின் நாலு நாலு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

By : Mohan Raj
கேரளாவில் உள்ள வயநாட்டில் ராகுல் காந்தி அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் தற்போது அதிர்ச்சி தரும் விதமாக காங்கிரஸ் கட்சியின் நாலு நாலு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் எம்.பி'யாக உள்ள முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அலுவலகம் கடந்த ஜூன் மாதம் சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக கல்பட்டா காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மகாத்மா காந்தியின் படத்தை சேதப்படுத்தியதாக காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்படுவதாக கல்பட்டா காவல்துறை அறிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடன இணைந்த இந்திய மாணவர் கூட்டமைப்பு இந்த சம்பவத்தை செய்தது என காங்கிரஸ் கட்சி கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்திற்கு பிறகு 12க்கும் மேற்பட்ட எஸ்.எப்இ.ஐ'யினர் கேரளா காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் காங்கிரஸ் கட்சியினர் மகாத்மா காந்தியின் படத்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாக வலம் வருகிறது, அதில் காங்கிரஸ் கட்சியினர் மகாத்மா காந்தியின் படத்தை சேதப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
