நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம்.. விவசாயி வீட்டில் உணவு சாப்பிட்ட மத்திய அமைச்சர் அமித்ஷா..!
நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம்.. விவசாயி வீட்டில் உணவு சாப்பிட்ட மத்திய அமைச்சர் அமித்ஷா..!
By : Kathir Webdesk
மேற்கு வங்கத்தில் உள்ள பெலிஜூரி கிராமத்தில் உள்ள ஒரு விவசாயி வீட்டிற்குச் சென்ற அமித்ஷா அமர்ந்து உணவு சாப்பிட்டார். இந்த படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு ஒரு சில மாநிலங்களை தவிர மற்ற மாநில விவசாயிகள் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் அரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த புதிய சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் உட்பட மத்திய அமைச்சர்கள் அனைவரும் வேளாண் சட்டத்தால் உள்ள நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்றிருந்தார். அப்போது மேற்கு வங்கத்தில் உள்ள பெலிஜூரி கிராமத்தில் விவசாய வீட்டில் உணவு சாப்பிட்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.