Kathir News
Begin typing your search above and press return to search.

இது தான் எங்க இந்தியா! உச்சத்தில் தூக்கி வைத்த உலக சுகாதார அமைப்பு - சரியான தலைமை இல்லாமல் இதெல்லாம் முடியாது!

We are witnessing the triumph of Indian science, enterprise and collective spirit of 130 crore Indians.

இது தான் எங்க இந்தியா! உச்சத்தில் தூக்கி வைத்த உலக சுகாதார அமைப்பு - சரியான தலைமை இல்லாமல் இதெல்லாம் முடியாது!

MuruganandhamBy : Muruganandham

  |  22 Oct 2021 2:03 AM GMT

இந்தியாவில் 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட சாதனைக்காக பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும், இந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கும் செலுத்த ஆரம்பிக்கப்பட்டது. பிறகு 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

கடந்த மே மாதம் முதல் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் முறையாக திட்டமிடப்பட்டு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்தில் நூறு கோடி இலக்கை எட்டிவிடலாம் என மத்திய அரசு கூறியதற்கு, தமிழகத்தில் சில திமுக சார்பு ஊடகங்கள், அதெப்படி முடியும் என விமர்சித்திருந்தன.

இந்நிலையில் அக்டோபர் 21அன்றே இந்தியா 100 கோடி டோஸ் தடுப்பூசி என்ற இலக்கை எட்டியுள்ளது. இதையடுத்து, பல்வேறு நாடுகளை விட அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தி நம்முடைய நாடு சாதனை படைத்துள்ளது. இதையடுத்து குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் Tedros adhanomஇந்திய அரசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில், கொரோனாவில் இருந்து மக்களை காக்கவும், தடுப்பூசி இலக்குகளை அடையவும் பெரும் முயற்சி செய்யும் பிரதமர் மோடி, சுகாதாரத்துறை ஊழியர்கள், விஞ்ஞானிகள் மற்றும் இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News