Kathir News
Begin typing your search above and press return to search.

நாம் சனாதன தர்மாவில் உறுதியாக இருக்க வேண்டும் - விஜயதசமி விழாவில் கர்ஜித்த மோகன் பகவத்

'நாம் சனாதன தர்மாவில் உறுதியாக இருக்க வேண்டும் நமது சனாதன தர்மத்திற்கு தடையாக இருக்க சட்ட விரோதமான சக்திகள் உருவாக்கப்படுகின்றன' என ஆர்.எஸ்.எஸ் ஆயுத பூஜை விழாவில் அதன் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.

நாம் சனாதன தர்மாவில் உறுதியாக இருக்க வேண்டும் - விஜயதசமி விழாவில் கர்ஜித்த மோகன் பகவத்

Mohan RajBy : Mohan Raj

  |  5 Oct 2022 12:41 PM GMT

'நாம் சனாதன தர்மாவில் உறுதியாக இருக்க வேண்டும் நமது சனாதன தர்மத்திற்கு தடையாக இருக்க சட்ட விரோதமான சக்திகள் உருவாக்கப்படுகின்றன' என ஆர்.எஸ்.எஸ் ஆயுத பூஜை விழாவில் அதன் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.

நாடு முழுவதும் நேற்று ஆயுத பூஜை பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் மகராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சரத்தின் நிதின் கட்கரி, மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மேலும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தலைமை விருந்தினராக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் என்ற பெருமையை பெற்ற சந்தோஷ் யாதவ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது, 'நமது பொருளாதாரம் கொரோனா பாதிப்பிற்கு முந்தைய நிலைக்கு திரும்பி உள்ளது இன்றைய பொருளாதாரம் இன்னும் வளரும் என சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளார்கள். விளையாட்டு வீரர்களும் நமது நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சனாதன தர்மத்தில் நாம் உறுதியாக இருக்க வேண்டும், நமது சனாதன தர்மத்திற்கு தடையாக இருக்க இரண்டாவது வகை தடையானது நாட்டின் ஒற்றுமைக்கு முன்னேற்றத்திற்கும் விரோதமான சக்திகள் உருவாக்கப்படுகின்றன. அவர்கள் போலிக் கதைகளை பரப்புகிறார்கள், அராஜகத்தை ஊக்குவிக்கிறார்கள், குற்றங்களில் ஈடுபடுவதுடன் பயங்கரவாதத்தை தூண்டி மோதல்களையும் சமூக நல்லிணத்தையும் கெடுக்கிறார்கள்' என பேசினார்.

மேலும் அவர் பேசியதாவது ஹிந்து ராஷ்டிரம் என்ற கருத்து அனைத்து மண்டலத்திலும் விவாதிக்கப்பட்டது, பலர் இந்து என்ற வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், அதற்கு பதில் மாற்று வார்த்தை கூறும் படி கூறுகின்றனர். அதில் எந்த மாற்றமும் இல்லை இந்து என்ற சொல்லை நாம் நமக்கு நாமே வலியுறுத்தி கொண்டே இருப்போம் என்றார். மேலும் கோவில், தண்ணீர், மயானம் ஆகியவை அனைவருக்கும் பொதுவானவை எனவும் கூறினார்.


Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News