சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்க இதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்: துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு வேண்டுகோள்.!
சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்க இதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்: துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு வேண்டுகோள்.!

By : Rama Subbaiah
கொரோனா சூழலுக்குப் பின் உலகில் சைக்கிள் ஓட்டுதல்’ என்ற தலைப்பில் புது டெல்லியில் ஆன்லைன் மூலம் சர்வதேச கருத்தரங்கு ஒன்று நேற்று நடந்தது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்று காணொலி மூலம் உரை நிகழ்த்தினார்.
தனது உரையில் சைக்கிள் ஒட்டுவதால் சுற்ற்ச் சூழலுக்கு மட்டும் அல்லாது நமது உடலில் ஏற்படும் ஆரோக்கிய மாற்றங்கள் குறித்தும் பேசினார். அப்போது அவர் மேலும் கூறியதாவது:-
கொரோனா தொற்று நமது வாழ்கை முறை, வாங்கும் சக்தி, நேரத்தை பயன்படுத்தும் முறைகள், பயண முறைகள் போன்றவற்றை மாற்றியிருக்கிறது. அதேநேரம் நகர்ப்புற பயண திட்டத்தில் சைக்கிள் ஓட்டுவதை ஒருங்கிணைப்பதற்கான ஒரு அரிதான வாய்ப்பையும் வழங்கி இருக்கிறது.
சைக்கிள் சவாரி, குறைந்த செலவிலான உடற்பயிற்சி. உடல் ஆரோக்கியம், மாசற்ற சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல வித நன்மைகள், சைக்கிள் சவாரியில் கிடைக்கும். இளைய சமுதாயத்தினர், சைக்கிள் சவாரி செய்ய வேண்டும்.
கொரோனா, நம் வாழ்க்கை முறையை மாற்றியுள்ளது. வாகனப் போக்குவரத்து குறைந்து, சைக்கிளில் சவாரி செய்வதும், நடை பயணமும் அதிகரித்துள்ளது. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில்,போக்குவரத்து வசதியற்ற இடங்களில் பயணிக்க, சைக்கிள் உதவுகிறது.
அதனால், கொள்கைகளை உருவாக்குபவர்களும், நகர்ப்புறங்களை வடிவமைப்போரும், இனி, சைக்கிள் பயணத்திற்கு, தனி பாதையை உருவாக்க வேண்டும்.அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், சைக்கிள் போக்குவரத்து அதிகரித்துள்ளது. நம் நாட்டிலும் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றார்.
அதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டும். இந்தியாவில், குறுகிய துாரப் பயணத்திற்கு, கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு பதிலாக, சைக்கிளில் பயணம் செய்வதன் வாயிலாக, ஆண்டுக்கு, 1.75 லட்சம் கோடி ரூபாய் மிச்சமாகும் என, ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.
