இளைஞர்களிடம் அர்பன் நக்ஸல்களை நெருங்க விடமாட்டோம் - யாரை குறிப்பிடுகிறார் பிரதமர் மோடி
'குஜராத் இளைஞர்களின் வாழ்க்கையை அழிக்க நகர்ப்புற நகசர்கள் முயற்சி செய்கின்றன' என பிரதமர் மோடி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

By : Mohan Raj
'குஜராத் இளைஞர்களின் வாழ்க்கையை அழிக்க நகர்ப்புற நகசர்கள் முயற்சி செய்கின்றன' என பிரதமர் மோடி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இரண்டாம் நாளில் பரூச் மாவட்டத்தில் மொத்த மருந்து பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினர். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி நகரப்புற நகசல்கள் தங்கள் தோற்றத்தை மாற்றிக்கொண்டு குஜராத்தில் நுழைய முயற்சிப்பதாகவும் ஆனால் இளைஞர்களின் வாழ்க்கையை அழிக்க அரசு அனுமதிக்காது எனவும் ஆம் ஆத்மி கட்சியை மறைமுகமாக தாக்கினார்.
மேலும் பேசியவர், 'நம் இளம் தலைமுறையை அழிக்க விடமாட்டோம் நாட்டை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நகர்ப்புற நக்சல்களிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எனவே நமது குழந்தைகளை எச்சரிக்க வேண்டும். அவர்கள் அந்நிய சக்திகளின் ஏஜெண்டுகள் அவர்களிடம் குஜராத் தலைகுனியாது குஜராத் அவர்களை அழித்துவிடும்' என பிரதமர் மோடி பேசினார். மேலும் சர்தார் படேலின் கனவு திட்டமான நர்மதை நதி திட்டத்தை நகர்ப்புற சக்திகள் முடக்க முயன்றதாகவும் படேலின் கனவை நினைவாக 40 முதல் 50 ஆண்டுகள் நீதிமன்றங்கள் கழித்ததாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
