பேஸ்புக்கில் தகவலை பகிரமாட்டோம்.. நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்த வாட்ஸ்அப்.!
தற்போதைய உலகம் அனைத்தும் சமூக வலைதளங்களை மையமாக வைத்து செயல்பட்டு வருகிறது. அனைத்து தகவல்களையும் சமூக வலைதளங்களில்தான் பதிவிடுகின்றனர். வர்த்தகம் ஆரம்பித்து ஒவ்வொரு நாட்டின் அரசு பற்றிய தகவல்களையும் சமூக வலைதளங்கள் மூலமாக மக்களுக்கு சென்றடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

By : Thangavelu
பயனாளர்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்று, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு பேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனமான வாட்ஸ்அப், தனிநபர் தகவல் பாதுகாப்பு கொள்கையில் மாற்றத்தை செய்துள்ளது. அதன்படி, பயனாளிகளின் தகவல்களை பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்ற தகவல் வெளியாகியது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது வழக்கு விசாரணையின்போது பேஸ்புக் நிறுவனத்துடன் தகவல்களை பகிர்ந்து கொள்ள மாட்டோம் என உத்தரவாதம் அளித்துள்ளது.