பள்ளிகளை திறந்த ஒரே வாரத்தில் 27 மாணவர்களுக்கு கொரோனா ! அதிர்ச்சியில் பெற்றோர்கள் !
கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையின் தீவிரம் தற்போது குறைந்து வரும் வேளையில், பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.
By : Thangavelu
கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையின் தீவிரம் தற்போது குறைந்து வரும் வேளையில், பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்று குறித்து சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், பஞ்சாப்பில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரம் கடந்து சென்ற நிலையில், லுதியானா, அபோகார், அமிர்தசரஸ் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 5 அரசுப் பள்ளிகளில் 27 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்களும் மற்றும் அவரது பெற்றோர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். மாணவர்களுக்கு தொற்று பரவிய சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மற்ற மாவட்டங்களில் தொற்று பரவுவதை கண்காணிப்பதற்காக மாநில சுகாதாரத்துறை பள்ளிகளில் கொரோனா பரிசோதனைகளை துரிதப்படுத்தியுள்ளது.
Source: Maalaimalar
Image Courtesy: ANI
https://www.maalaimalar.com/news/topnews/2021/08/11150643/2910242/Week-after-schools-reopen-27-students-test-ve-for.vpf