Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா தொற்றுநோயை எதிர்த்து இந்தியாவின் ஆரம்பக்கட்ட நடவடிக்கை - பாராட்டிய WEF தலைவர்.!

கொரோனா தொற்றுநோயை எதிர்த்து இந்தியாவின் ஆரம்பக்கட்ட நடவடிக்கை - பாராட்டிய WEF தலைவர்.!

கொரோனா தொற்றுநோயை எதிர்த்து இந்தியாவின் ஆரம்பக்கட்ட நடவடிக்கை - பாராட்டிய WEF தலைவர்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Oct 2020 11:05 PM IST

கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தில் அதனை எதிர்த்து இந்தியாவின் நடவடிக்கைகளைக் குறித்து உலக சுகாதார மன்றத்தின்(WEF) தலைவர் கிளாஸ் ஸ்வாப் பாராட்டு தெரிவித்துள்ளார். உலக நிகழ்ச்சிகளை வடிவமைப்பதற்கான சக்தி நாட்டிற்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.



PTI விடம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் பேசும் போது, நிலையான டிஜிட்டல் மற்றும் பொருளாதாரத்தை அமைக்க நாட்டிற்கு தற்போது மிக பெரிய வாய்ப்புள்ளது என்று ஸ்வாப் கூறினார். மேலும், "நாட்டின் அதிக மக்கள் தொகை மற்றும் பரந்த பன்முகத்தன்மை கொண்டுள்ளதால் உலகத்தின் உருமாற்றுவதற்கும் நம் எதிர்காலத்தை மாற்றுவதற்கும் இந்தியாவிற்குச் சக்தி உள்ளது, " என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முந்தைய ஊரடங்கு குறித்துப் பேசிய ஸ்வாப், ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தில் சிரமம் அடைந்த சிறு தொழில் வணிகர்களுக்கு 800 மில்லியன் மக்களுக்கு அன்றாட உணவுப் பொருள்கள் வழங்கியதற்கு இந்தியாவிற்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இதற்கிடையில், தொற்றுநோய் காலத்தில் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், குறைந்த வருமானம் பெரும் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் தினசரி கூலி தொழில் செய்பவர்களின் வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது என்றும் ஸ்வாப் தெரிவித்தார். இந்த பொதுச் சுகாதார சிக்கலில் இவர்களைப் போன்றவர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்தி மனிதாபிமானத்துடன் செயல்படுவதே முக்கியம் என்று அவர் தெரிவித்தார். மேலும் நேர்காணல் போது, உலகம் தற்போது மனிதாபிமானத்தில் மாற்றம் அடைவது குறித்து ஸ்வாப் பேசியதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News