மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சியில் பாதுகாப்பில்லை.. 79 பா.ஜ.க. தலைவர்களுக்கு வி.ஐ.பி. பாதுகாப்பு.!
மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான மம்தா பானர்ஜி ஆட்சி நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான மம்தா பானர்ஜி ஆட்சி நடைபெற்று வருகிறது.
நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் எப்படியும் மீண்டும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என மம்தா பானர்ஜி பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார். ஆனால் இந்த முறை ஜெயிப்பது கடினம் என தெரிந்துவிட்டது. அதே நேரத்தில் பாஜக வேட்பாளர்களை தாக்குவது மற்றும் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்காமல் விடுவது போன்ற பணிகளை மம்தா பானர்ஜி அரசு செய்து வருகிறது.
மேலும், மம்தா ஆட்சியில் பாஜக தலைவர்களுக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை நிறுவனங்களும் அவர்களுக்கு பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாக அறிக்கை அளித்துள்ளது. இதனை தொடர்ந்து பாஜக தலைவர்களுக்கு மத்திய அரசே பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி 79 தலைவர்களுக்கு மத்திய அரசு விஐபி அந்தஸ்து பாதுகாப்பு வழங்கியுள்ளது.
அவர்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர் என கூறப்பட்டுள்ளது. இதன்படி பாஜக தலைவர்களான ஜிதேந்தர் திவாரி, கிரேன்மே சட்டபாத்யாயா, யாஷ் தாஸ் குப்தா, சரவந்தி சட்டர்ஜி உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். மேலும், திரிணாமுல் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு வந்தவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.