Kathir News
Begin typing your search above and press return to search.

மேற்கு வங்காளம்: TMC தலைவர் வினய் மிஸ்ராவை கால்நடை கடத்தல் வழக்கில் கைது செய்ய CBI உத்தரவு!

மேற்கு வங்காளம்: TMC தலைவர் வினய் மிஸ்ராவை கால்நடை கடத்தல் வழக்கில் கைது செய்ய CBI உத்தரவு!

மேற்கு வங்காளம்: TMC தலைவர் வினய் மிஸ்ராவை கால்நடை கடத்தல் வழக்கில் கைது செய்ய CBI உத்தரவு!

Saffron MomBy : Saffron Mom

  |  27 Jan 2021 1:04 PM GMT

நாட்டில் கால்நடைகளைப் பாதுகாப்பதற்கும் மற்றும் அது படுகொலை செய்யப்படுவதைத் தடுப்பதற்கும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு சட்டங்களும் இயற்றப்பட்டு வருகின்றது. ஆனால் பதவியில் இருக்கும் தலைவர்கள் கூட இது குற்றம் என்று தெரிந்தும் அந்த குற்றத்தைத் துணிச்சலுடன் செய்து வருகின்றனர். அதை உறுதி செய்யும் நிகழ்வாக, மத்திய புலனாய்வு அமைப்பு திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் வினய் மிஸ்ராவுக்கு எதிராகக் கால்நடை கடத்தல் வழக்கில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, கொல்கத்தாவில் உள்ள CBI நீதிமன்றம் வினய் மிஸ்ராவுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதுவரை வினய் மிஸ்ராவுக்கு நான்கு முறை CBI அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் இதுவரை வினய் மிஸ்ரா இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் நடந்த கால்நடை கடத்தல் வழக்கில் எந்த விசாரணைக்கும் அவர் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் CBI மேற்கு வங்காளத்தில் மிஸ்ராவின் அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. மேலும் மிஸ்ரா, மேற்கு வங்காளத்தின் முதலமைச்சரான மம்தாவின் உறவினர் அபிஷேக் பானெர்ஜீயின் நெருங்கிய நபர் என்பதும் குறிப்பிடத் தக்கத்து.
மேலும் CBI வினய் மிஸ்ராவுக்கு அறிக்கை அனுப்பியதுடன், அவர் நாட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருக்கத் துறைமுகம், விமான நிலையம் மற்றும் எல்லைகளையும் எச்சரிக்கை படுத்தியுள்ளது. மேலும் BSF அதிகாரிகளின் கால்நடை கடத்தல் தொடர்பான வழக்கை விசாரித்த போது வினய் மிஸ்ராவின் பெயர் சேர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றன.
செப்டம்பர் 21, 2020 இல் மத்திய புலனாய்வு அமைப்பு வழக்குப் பதிவு செய்தது. செப்டம்பர் 23 இல் கொல்கத்தாவில் பல்வேறு இடங்களில் சோதனையை நடத்தியது. CBI FIR யின் ஒன்றில், 36 BSF அதிகாரிகள், மூன்று தனிநபர்கள், அடையாளம் தெரியாத பொதுச் சேவை புரிபவர்கள், முதலியவர்களின் பெயர்கள் மேற்கு வங்காளத்தில் பங்களாதேஷ் எல்லையில் சட்ட விரோதமாகக் கால்நடைகளைக் கடத்தியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News