Kathir News
Begin typing your search above and press return to search.

மேற்கு வங்காளம்: பத்திரிகையாளரை அறைந்த TMC MLA - போராட்டத்தில் சக பத்திரிகையாளர்கள்!

மேற்கு வங்காளம்: பத்திரிகையாளரை அறைந்த TMC MLA - போராட்டத்தில் சக பத்திரிகையாளர்கள்!

மேற்கு வங்காளம்: பத்திரிகையாளரை அறைந்த TMC MLA - போராட்டத்தில் சக பத்திரிகையாளர்கள்!

Saffron MomBy : Saffron Mom

  |  7 Jan 2021 12:08 PM GMT

மேற்கு வங்காளத்தில் ஜலப்பைகுறி மாவட்டத்தில் பத்திரிகையாளர் ஒருவரை மைனாகுறியை சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி MLA ஆனந்த டெப் ஆதிகாரி அறைந்ததற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சோம்நாத் சக்ரவர்த்தி என்ற பத்திரிகையாளர் MLA குறித்து விமர்சனம் செய்து செய்தி வெளியிட்டதற்காக MLA அறைந்ததாகக் கூறப்படுகின்றது.

இருப்பினும் தன் மேல் உள்ள குற்றச்சாட்டுகளை MLA மறுத்து, "பத்திரிகையாளர் வெளியிட்ட செய்தி குறித்து அனைவரும் படியுங்கள் அது என்னைக் கோபமடையச் செய்யுமா செய்யாத என்று கூறுங்கள்," என்று கூறியுள்ளார். இந்த சம்பவமானது மைனாகுறி பகுதியில் MLA ஆனந்த டெப் ஆதிகாரி உடற்பயிற்சி கூடத்தைத் திறந்து வைத்த நிகழ்வுக்குப் பிறகு நடந்துள்ளது.

இந்த சம்பவமானது ஜெல்பேஷ் பகுதியில் MLA வின் உரையின் போது நடந்தது. "அவரை குறித்த செய்தியானது செவ்வாய்க்கிழமை அன்று வெளியிடப்பட்டது. ஒரு நிகழ்ச்சியில் அரசாங்கத்திற்கு எதிராகச் செய்தி வெளியிட்டிருப்பதாகக் கூறி என்னை அறைந்தார்," என்று சக்ரபோர்த்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சக்கரபோர்த்தி ஆனந்த டெப் ஆதிகாரி மீது FIR பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவமானது சக பத்திரிகையாளர்களைக் கோபமடையச் செய்தது மட்டுமல்லாமல் புதன்கிழமை அன்று சிலிகுரி பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய பத்திரிகையாளர்கள் தாக்குதலைத் தொடர்ந்து அதனைக் கண்டித்து கோஷங்களையும் மற்றும் பலகைகளை எழுப்பினர்.

இந்த சமத்துவம் குறித்து மாநில பா.ஜ.க கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் ஆளும் TMC அரசாங்கத்தையும் விமர்சனம் செய்திருந்தது. மேலும் பத்திரிகையாளருக்கு ஏற்பட்டுள்ள துன்புறுத்தல் TMC குறித்துத் தெளிவாகக் காட்டுகின்றது மற்றும் மாநிலத்தில் ஆளும் அரசாங்கத்தின் கொடுமைகளுக்குப் பத்திரிகையாளர்களும் விட்டுவைக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News