Kathir News
Begin typing your search above and press return to search.

மேற்கு வங்காளம்: சீதா தேவி குறித்து இழிவான கருத்துக்களைக் கூறிய TMC தலைவர் மீது FIR!

மேற்கு வங்காளம்: சீதா தேவி குறித்து இழிவான கருத்துக்களைக் கூறிய TMC தலைவர் மீது FIR!

மேற்கு வங்காளம்: சீதா தேவி குறித்து இழிவான கருத்துக்களைக் கூறிய TMC தலைவர் மீது FIR!

Saffron MomBy : Saffron Mom

  |  11 Jan 2021 4:47 PM GMT

TMC தலைவர் கல்யாண் பனர்ஜீ கடவுள் சீதா மற்றும் ராமர் பக்தர்கள் குறித்த இழிவான கருத்துக்கள் கூறிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது. அந்த வீடியோ பல நபர்களிடம் இருந்து எதிர்ப்புகளைப் பெற்றது. தற்போது அவர் மீது ஹௌராவில் உள்ள கோலபாரி காவல்நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த FIR பதிவானது பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா தலைவர் ஆஷிஷ் ஜெய்ஸ்வாலால் பதிவு செய்யப்பட்டது. இவருடைய இழிவான கருத்துக்களால் மேற்கு வங்காள சமூகத்தினர் காயமடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார். மேலும் TMC தலைவர் அவரின் கருத்துக்கு மன்னிப்பு கோரா வேண்டும் என்றும் ஜெய்ஸ்வால் கூறினார். கல்யாண் பனர்ஜீ கருத்துக்கு அபய் குமார் ஜிஹா கண்டனம் தெரிவித்ததோடு, 24 மணிநேரத்திற்குள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார்.

அவரின் இழிவான கருத்துக்களுக்குக் கடுமையாகப் பதிலளித்த பா.ஜ.க தலைவர் லாக்கெட் சட்டர்ஜி, கல்யாண் பனர்ஜீ இந்து கலாச்சாரம் மற்றும் இந்து காவியங்களான மஹாபாரதம் மற்றும் இராமாயணத்தை இழிவுபடுத்தியுள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் எப்பொழுதும் முஸ்லீம் சமூகத்தினரின் ஓட்டுகளைத் தக்கவைத்துக்கொள்ள எப்பொழுதும் சிறுபான்மை சமூகத்தினரின் மனதைத் திருப்திப்படுத்தி வருகின்றது. இருப்பினும் தற்போது தேர்தலுக்கு முன்னர், இந்துக்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது என்று அவர் கடுமையாக தன் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

"சீதா தேவி இராவணன் தன்னை கடத்தியதற்காக நன்றி தெரிவிப்பதாக ராமரிடம் கூறினார். உங்களை வழிபடுபவர்கள் அல்லது ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிடுபவர்கள் என்னைக் கடத்தி இருந்தால் உத்தரப் பிரதேசம் ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு நடந்தது போன்றே நடந்திருக்கும்," என்று ஒரு இழிவான கருத்தினை கல்யாண் பனர்ஜீ கூறினார். அரசியல் நோக்கத்துடன் கருத்துக்களை வெளியிட்ட அதே நேரத்தில், சீதாவுக்கு எதிராகக் குற்றம்சாட்டி ராம பக்தர்களை விமர்சித்த அதே நேரத்தில், இராவணன் என்ற அரக்கனை உயர்த்தி தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News