Kathir News
Begin typing your search above and press return to search.

மேற்கு வங்காளம்: பேரணியில் பா.ஜ.க ஆதரவாளர்கள் மீது காவல்துறை தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு.!

மேற்கு வங்காளம்: பேரணியில் பா.ஜ.க ஆதரவாளர்கள் மீது காவல்துறை தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு.!

மேற்கு வங்காளம்: பேரணியில் பா.ஜ.க ஆதரவாளர்கள் மீது காவல்துறை தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு.!

Saffron MomBy : Saffron Mom

  |  7 Dec 2020 6:15 PM GMT

மேற்கு வங்காளம் சிலிகுரி பகுதியில் திங்களன்று பா.ஜ.க நடத்திய பேரணியில் கலந்து கொண்ட போராட்டக்காரர்கள் மீது வங்காள காவல்துறை நீர் மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசி தாக்கியதில் ஒரு பா.ஜ.க தொண்டர் உயிரிழந்துள்ளார்.

"உத்தர்கன்யா அபிஜன்" யின் ஒரு பகுதியாக BJYM ஆதரவாளர்கள் இரண்டு எதிர்ப்பு பேரணிகளை மேற்கொண்டனர். மக்களுக்கு மாநில அரசு அறிவித்த கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை என்பதற்காகவும் மற்றும் அவர்கள் அளிக்கும்'நலத்திட்டங்கள் சாமானிய மக்களுக்கு வந்தடையவில்லை என்பதற்காகவும் போராட்டங்களை நடத்தினர்.

அதிகாரிகள் அமைத்திருந்த தடுப்புகளை பா.ஜ.க ஆதரவாளர்கள் தாண்டிய பின்பும் காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்டனர். இதனால் காவல்துறை மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடியே மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் பா.ஜ.க உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் சில பா.ஜ.க உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.

முதல் பேரணி கட்சியின் மாநில தலைவர் திலிப் கோஷ் ஃபுல்பாரி பஜாரில் பகுதியில் நடத்தினார். இரண்டாவது பேரணி கட்சியின் தேசிய தலைவர் கைலாஷ் விஜயவர்கியா மற்றும் BJYM கட்சியின் தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா தலைமையில் நடத்தப்பட்டது.

இந்த சம்பவம் குறித்துப் பேசிய பா.ஜ.க யுவ மோர்ச்சா தலைவர் தேஜஸ்வி சூர்யா, "அமைதியாக நடத்தப்பெற்ற பேரணியில் பல பா.ஜ.க ஆதரவாளர்கள் காயமடைந்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் ஜனநாயகம் அளிக்கப்பட்டு வருகின்றது," என்று தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News