Kathir News
Begin typing your search above and press return to search.

மேற்கு வங்காளம்: மீண்டும் பா.ஜ.க தொண்டர்கள் மீது TMC கும்பல் தாக்குதல்!

மேற்கு வங்காளம்: மீண்டும் பா.ஜ.க தொண்டர்கள் மீது TMC கும்பல் தாக்குதல்!

மேற்கு வங்காளம்: மீண்டும் பா.ஜ.க தொண்டர்கள் மீது TMC கும்பல் தாக்குதல்!

Saffron MomBy : Saffron Mom

  |  5 Feb 2021 5:30 PM GMT

மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மீதான தாக்குதலும், வன்முறையும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. பா.ஜ.க நடத்தும் அமைதி பேரணியைத் தொடர்ந்து வன்முறையாக்கி வருகின்றனர் TMC கும்பல். இதன் மூலம் மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து அரசியல் வன்முறை நடந்து கொண்டே இருக்கின்றது.

மேற்கு வங்காளத்தில் ஹவுரா பகுதியில் உள்ள துமுர்ஜால ஸ்டேடியத்தில் பா.ஜக வின் உறுப்பினர்கள் பேரணியை ஜனவரி 31 இல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் அந்த நிகழ்ச்சிக்குச் செல்லும் வேளையில் மூன்று பா.ஜ.க உறுப்பினர்கள் கடுமையாகக் காயமடைந்தனர். ஹவுரா பகுதியில் பாங்கரா PS பகுதியில் வைத்து பா.ஜ.க தொடர்கள் ரஞ்சித் சிங், ராணா விஷால் சிங் மற்றும் குணால் சிங் ஆகியோர் TMC தொண்டர்களால் கண்மூடித் தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் அனைவரும் கொல்கத்தாவில் உள்ள SSKM மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் இருவர் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளனர். இருப்பினும், TMC இந்த குற்றச்சாட்டுத் தாக்குதலை வழக்கம் போல் மறுத்துள்ளது. இருப்பினும் வெளிவந்த வீடியோ ஆதாரங்கள், அவர்கள் அந்த கும்பலால் தாக்கப்பட்டதற்கான காட்சிகள் முழுமையாகக் காட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த பேரணியானது மத்திய உள்துறை அமைச்சர் அமீத் ஷா தலைமையில் உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியானது மம்தா பனெர்ஜீ தலைமையிலான திரிணமூல் காங்கிரஸை விடு சமீப காலங்களில் பா.ஜ.க வில் இணைந்தவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சனிக்கிழமை பா.ஜக வில் இணைந்த முன்னாள் மேற்கு வங்காள வனத்துறை அமைச்சர் ராஜிப் பானெர்ஜீ, சட்டமன்ற உறுப்பினர் வைஷாலி டால்மியா, உத்தரப்பாரா MLA பிரபிற் கோஷல், முன்னாள் ஹவுரா மேயர் ரத்தின் சக்ரபோத்தி, பெங்காலி நடிகர் ருடர்னில் கோஷ் கலந்து கொண்டனர். மேலும் அங்கு மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி, பா.ஜ.க மாநிலத்தலைவர் திலீப் கோஷ், முகுல் ராய் மற்றும் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News