தொடரும் பா.ஜ.க தொண்டர்கள் மீதான TMC கும்பல் தாக்குதல்!
தொடரும் பா.ஜ.க தொண்டர்கள் மீதான TMC கும்பல் தாக்குதல்!

மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து பா.ஜ.க தொண்டர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து இருக்கின்றது. அவர்கள் அமைதியாக நடத்தும் பேரணியைத் தொடர்ந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை அன்று, மேற்கு வங்காளத்தில் மிட்னாப்பூர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க கேஷ்பூர் பகுதியில் இருந்து வந்த பா.ஜ.க தொடர்களை திரிணாமூல் காங்கிரஸ் கும்பல் தாக்கியுள்ளது.
ஹாலடியா பகுதியில் நடக்கவிருக்கும் பிரதமரின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க தொண்டர்களின் வாகனங்களை TMC தொண்டர்கள் சூறையாடி உள்ளனர். மேலும் அவர்கள் வாகனங்கள் மீது கற்களை வீசியுள்ளனர். இந்த தாக்குதலில் பல பா.ஜ.க தொண்டர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் பிரதமரை வரவேற்க வைத்திருந்த பேனர்களையும் கிழித்துள்ளனர். இருப்பினும் மாநில அரசாங்கம் வழக்கம் போல் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
மேலும் நந்திக்ராம் பகுதியில் நடந்த மற்றொரு தாக்குதலில் ஐந்து பா.ஜ.க தொண்டர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு நேற்று இரவு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த தாக்குதலில் ஒரு பா.ஜ.க தொண்டர் மோசமான நிலையில் உள்ளார்.
அறிக்கையின் படி, ஞாயிற்றுக்கிழமை ஹாலடியா பகுதியில் பிரதமரின் பொதுக் கூட்டத்திற்காக பா.ஜ.க தொண்டர்கள் ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். சனிக்கிழமை இரவு அவர்களை TMC கும்பல் தாக்கியுள்ளது. இதற்கிடையில் ஹாலடியா பகுதி பிரதமரின் உரைக்காக முன்பே கடுமையான பாதுகாப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது.
மேற்கு வங்காளத்தில் ஹாலடியா பகுதியில் பல உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் வருகை புரிகிறார். மேலும் இது வரும் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் பிரச்சாரமாகவும் அமைந்துள்ளது.