Kathir News
Begin typing your search above and press return to search.

என்ன நடந்தது பஞ்சாப், பாட்டியாலா'வில்? ஏன் கலவரம்?

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இரு பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு கலவரம் வெடித்தது இந்நிலையில் அங்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்வோம்.

என்ன நடந்தது பஞ்சாப், பாட்டியாலாவில்? ஏன் கலவரம்?

Mohan RajBy : Mohan Raj

  |  1 May 2022 7:30 AM GMT

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இரு பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு கலவரம் வெடித்தது இந்நிலையில் அங்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்வோம்.

ஆம் ஆத்மி கட்சி ஆளும் மாநிலமான பஞ்சாபில் முதல்வர்பகவந்த் மான் பொறுப்பு வகித்து வருகிறார், இந்த நிலையில் காலிஸ்தான் நிறுவன நாளான ஏப்ரல் 29 ஆம் தேதியை முன்னிட்டு பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பினரால் சீக்கிய கொடியேற்றப்பட்டு ஊர்வலம் நடத்தப்பட்டது. அந்தவகையில் பஞ்சாபில் 'காலிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷமிட்டபடி காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஊர்வலம் நடத்தினர்.

அதேசமயம் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கைக்கு எதிர் கருத்துடைய சிவசேனா அமைப்பினர் இந்த ஊர்வலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 'காலிஸ்தான் முர்தபாத்' என்று கோஷமிட்டபடி ஊர்வலம் நடத்தினர், சரியாக இந்த இரு தரப்பினரும் பாட்டியாலா காளி கோவிலை அடைந்த பொழுது வாக்குவாதமாக மாறி பின்பு கைகலப்பு மோதலாக மாற்றியது. இதனால் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கற்களை தூக்கி வீசி தாக்கிக் கொண்டனர்.


இந்த தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கலவரத்தை கட்டுப்படுத்த முயன்றனர். கலவர நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வான் பகுதியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் இறுதியில் ஓரளவுக்கு நிலைமை கட்டுக்குள் வந்த பிறகு அதன் நிலவரம் எப்படி இருந்தது என்றால் கலவரத்தில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மேலும் அங்கு கலவரம் மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் இருக்க காவல்துறை சிறப்பு பாதுகாப்பு படையை கொண்டு பாட்டியாலா சுற்றுவட்டார பகுதி பாதுகாப்பில் ஈடுபடுத்தி வருகிறது. மேலும் இது குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தீவிர ஆலோசனை கூட்டங்கள் நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகளுடன் அடிக்கடி பேச்சுவார்த்தையும் நிகழ்த்தி வருகிறார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன தடுக்கவும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் நேற்று சனிக்கிழமை முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது பாட்டியாலா பகுதியில், மேலும் பஞ்சாப் அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கையாக நேற்று சனிக்கிழமை முழுவதும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டிருந்தன, இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News