'இந்திய ராணுவத்துக்கு நீங்க என்ன செஞ்சிட்டிங்க?' - ராகுலை விளாசிய அனுராக் தாக்கூர்
'ராகுலுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நம் ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லை' என அனுராக் தாக்கூர் கட்டமாக தெரிவித்துள்ளார்.
By : Mohan Raj
'ராகுலுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நம் ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லை' என அனுராக் தாக்கூர் கட்டமாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி 'சீன ராணுவம் இந்திய ராணுவ வீரர்களை அடித்து விரட்டுகிறது, அவர்களின் அச்சுறுத்தல் தெளிவாக இருக்கிறது அவர்கள் போருக்கு தயாராகி வருகிறார்கள்! ஆனால் இந்திய அரசாங்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது' என இராணுவத்தை விமர்சித்திருந்தார்.
ராகுல் காந்திகள் விமர்சனத்திற்கு தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இதனை கண்டித்துள்ளார். இது குறித்து பேசி அனுராக் தாக்கூர் கூறியதாவது, 'இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய போது அவர் எங்களிடம் கேள்வி எழுப்பினர். ராகுல்காந்திக்கும், காங்கிரஸ்க்கும் நம் ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லை. இது 1962 ம் ஆண்டு இந்தியா அல்ல 2014 இந்தியா பிரதமர் மோடியின் இந்தியா.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் 10 ஆண்டுகளாக ராணுவத்திற்கு போர்விமானங்கள், குண்டு துளைக்காத ஜாக்கெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் கூட வாங்க முடியவில்லை, நம் இராணுவத்திற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? இன்று இந்தியாவில் 300'க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இப்போது இந்தியா உபகரணங்கள் இறக்குமதியாளராக இல்லாமல் ஏற்றுமதியாளராக உள்ளது, இதுதான் மோடியின் இந்தியா' என தெரிவித்துள்ளார்.