'உலகளாவிய தீவிரவாதத் தாக்கம்' - இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
'உலகளாவிய தீவிரவாதத் தாக்கம்' - இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

By : Saffron Mom
கடந்த நவம்பரில் ஆரம்பித்து ஒரு வருடத்திற்கும் மேலாக கொரானா வைரஸ் தொற்று நோய் உலகம் முழுவதும் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருகிறது. இது ஒரு நாட்டின் பொருளாதாரம், பொது சுகாதாரம் உள்ளிட்ட பல விஷயங்களின் மீது பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
உலகளாவிய தீவிரவாதம் கொரானா வைரஸ் காலகட்டத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்து, உலகலாவிய பயங்கரவாத குறியீட்டு அறிக்கை (Global Terrorism Index) ஒரு அறிக்கை வழங்கியுள்ளது. அவர்கள் வழங்கியுள்ள அறிக்கையில், கொரானா தொற்றுநோய் தொடர்ந்து வருவதால் உலகெங்கிலும் உள்ள நாடுகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் குறைவான கவனமும், பொது சுகாதாரத்தில் அதிக கவனமும் செலுத்தி வருகின்றன. எனவே பயங்கரவாதம் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கிறது.
உலகம் முழுவதும், இந்த தொற்றுநோய் சமயம் பயங்கரவாதிகளுக்கு தங்கள் பலத்தை அதிகப்படுத்தவும், விரிவுபடுத்தவும் வாய்ப்புகளை வழங்க கூடுமென்றும் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் அரசாங்கத்தின் முயற்சிகள் தொற்றுநோயால் வலுவிழந்து பயங்கரவாதத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் கூறுகிறது.
தொற்று நோய் தாக்கிய ஒரு பகுதியில் உள்ளூர்வாசிகளுக்கு அத்தியாவசிய சேவைகள், நிதி உதவி மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குவதன் மூலம் பயங்கரவாத அமைப்புகள் ஆதரவு பெற முயற்சிக்கலாம் என்றும் அரசாங்கத்தின் உதவிகள் பலவீனமாக இருக்கும் இடங்களில் இத்தகைய அபாயம் அதிகம் இருப்பதாகவும் கூறுகிறது.
இந்த உலகளாவிய பயங்கரவாதம் குறித்த அறிக்கை உலகம் முழுவதும் பயங்கரவாதத்தின் தாக்கத்தை அளவிடும். இந்தியா இதில் எட்டாவது இடத்தில் உள்ளது, இது இந்தியா பயங்கரவாத தாக்கம் அதிகமாக இருக்கும் பகுதி என்பதை குறிக்கிறது. இப்பட்டியலில் முதலிடத்தில் ஆப்கானிஸ்தானும், இரண்டாவது இடத்தில் ஈராக்கும் உள்ளன.
கொரானா வைரஸ் தொற்று நோய், பயங்கரவாத அமைப்புகளுக்கு தீவிர மயமாக்கல் மற்றும் ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஒரு வாய்ப்பை வழங்கக் கூடும் என்ற அறிக்கை மேலும் கூறுகிறது. அல்கொய்தா மற்றும் ISIL ஆகிய தீவிரவாத அமைப்புகள் ஏற்கனவே இது தொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
அல்கொய்தா, மேற்கு நாடுகளில் வசிக்கும் முஸ்லிமல்லாதவர்கள் இதை பயன்படுத்தி இஸ்லாமுக்கு மாற வேண்டும் என்று அறிவுறுத்தியது. இந்த கொரனா காலகட்டத்தையும் வலுவிழந்த பாதுகாப்பையும் காரணமாகக் கொண்டு உலகளாவிய ஜிகாத் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளது.
ஆனால் இது பயங்கரவாதிகளுக்கு மட்டுமே முழு சாதகமாக இருக்காது. ஏகப்பட்ட பயண தடைகள் இருப்பதாலும், ஊரடங்கு நடப்பதாலும் ஆள் சேர்ப்பதற்கும் நிதிஉதவி உருவாக்குவதற்கும், தாக்குதலை நடத்துவதற்கும் பயங்கரவாதிகளுக்கு மிகவும் சிரமமாக இருக்கும் என்றும் உள்ளூர் தீவிரவாதிகளுக்கு இதில் பாதிப்பு குறைவு என்றும் உலகளாவிய அளவில் நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல்களை தொற்றுநோய் குறைந்திருந்தாலும் உள்ளூர் அளவில் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம் என்று இவ்வறிக்கை எச்சரித்துள்ளது.
