Kathir News
Begin typing your search above and press return to search.

இனிமேல் 'வாட்ஸ் ஆப்' இல்லை.. உச்சநீதிமன்றம் முடிவு.!

வழக்கு விபரங்கள் குறித்து இனிமேல் ‘வாட்ஸ் ஆப்’ மூலமாக பகிரப்படாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இனிமேல் வாட்ஸ் ஆப் இல்லை.. உச்சநீதிமன்றம் முடிவு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  1 March 2021 11:50 AM IST

வழக்கு விபரங்கள் குறித்து இனிமேல் 'வாட்ஸ் ஆப்' மூலமாக பகிரப்படாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி முதல் கொரோனா தொற்று காரணமாக வழக்குகள் அனைத்தும் வீடியோ கான்பரஸ் மூலமாக நடைபெற்று வந்தது.

அப்போது தனி குழுவழக்கின் விசாரணை உள்ளிட்ட விபரங்கள் குறித்து 'வாட்ஸ் ஆப்' மூலம் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. அதே போன்று வழக்கில் ஆஜராவோருக்கும் பகிரப்பட்டு வந்தது. இதற்கு என்று வாட்ஸ்ஆப்பில் தனிக்குழுக்கள் அமைத்திருந்தது.




இதனிடையே மத்திய அரசு சமூக ஊடகங்களுக்கு பல்வேறு வகையிலான கட்டுப்பாடுகளை நிர்ணயம் செய்துள்ளது. அதாவது ஒரு செய்தியை பகிருகின்ற போது, அது எங்கிருந்து உருவானது என்ற தகவல்களை மத்திய அரசு கேட்கும்போது அளிக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.

இந்நிலையில், இன்று முதல் வழக்கு விசாரணை உள்ளிட்ட விபரங்கள் குறித்து வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்படாது. இமெயில் அல்லது செல்பேசி எண்ணுக்கு தகவல் அனுப்பப்படும் என்று உச்சநீதிமன்றம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவால் வழக்கறிஞர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். முக்கிய வழக்கின் விபரங்கள் வாட்ஸ்ஆப்பில் முழுயை£க அனுப்பப்படும். இதனால் எளிதில் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News