Kathir News
Begin typing your search above and press return to search.

நீ பர்தா அணிந்து தான் கல்லூரிக்கு வர வேண்டும் - ஆசிரியருக்கே உத்தரவிட்ட இஸ்லாமிய மாணவர்கள்!

When a Muslim teacher in West Bengal was hounded and forced to quit her job for not wearing a burqa to college

நீ பர்தா அணிந்து தான் கல்லூரிக்கு வர வேண்டும் - ஆசிரியருக்கே  உத்தரவிட்ட இஸ்லாமிய மாணவர்கள்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Feb 2022 12:12 PM GMT

கர்நாடகாவில் உருவான ஹிஜாப் சர்ச்சை , இந்தியா முழுவதும் சீற்றத்தை கிளப்பியுள்ளது. பல மாநிலங்களில் உள்ள முஸ்லிம்கள் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களுக்குள் ஹிஜாப்/புர்கா அணிய உரிமை கோரி, தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேற்கு வங்கத்திலும் ஹிஜாப் ஆதரவு போராட்டங்கள் வேகம் கண்டுள்ளன.

மாநில அரசின் கீழ் இயங்கும் தன்னாட்சிப் பல்கலைக்கழகமான அலியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஏறக்குறைய 500 முஸ்லீம் மாணவர்கள், கர்நாடகாவில் நிலவும் ஹிஜாப் சர்ச்சைக்கு எதிராக கடந்த வாரம் பதாகைகளுடன் வீதிகளில் இறங்கி கோஷங்களை எழுப்பினர்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இதே கல்லூரிதான் 2010 ஆம் ஆண்டு பர்தா அணியாமல் கல்லூரி வளாகத்தில் வந்ததற்காக ஒரு ஆசிரியரை வேலையை விட்டு வெளியேறும்படி மாணவர்களா ல் வற்புறுத்தப் பட்டார். அப்போது , அலியா பல்கலைக்கழகத்தின் மாணவர்களால் எட்டு ஆசிரியர்கள் கல்லூரிக்கு பர்தா அணிந்து வருமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். ஆனால் பல்கலைக்கழகத்தில் எந்த ஆடைக் கட்டுப்பாடும் இல்லை. ஏழு ஆசிரியர்கள் கோரிக்கைகளுக்கு இணங்கிய நிலையில், ஒரு ஆசிரியர், ஷிரின் மித்யா, அழுத்தத்திற்கு அடிபணிய மறுத்து, அதற்குப் பதிலாக ராஜினாமா செய்தார்.

அந்த நேரத்தில் 24 வயதான ஷிரின் மித்யா, மார்ச் 2010 இல், மேற்கு வங்காளத்தின் முதல் இஸ்லாமியப் பல்கலைக்கழகமான கொல்கத்தாவில் உள்ள அலியா பல்கலைக்கழகத்தில் பெங்காலி இலக்கியம் கற்பிக்க விருந்தினர் விரிவுரையாளராக பணியமர்த்தப்பட்டார். அப்போது அனைத்து பெண் விரிவுரையாளர்களும் பர்தா அணிந்து கல்லூரிக்கு வருவதை கட்டாயமாக்கியது மாணவர் சங்கம்.

"ஏப்ரல் நடுப்பகுதியில், மாணவர் சங்கம் எங்களை அழைத்து, எட்டு பெண் ஆசிரியர்களையும் பர்தா அணியச் சொன்னார்கள். இதுபற்றி அதிகாரிகளிடம் விவாதிக்க வேண்டாம், எங்கள் உத்தரவை பின்பற்றுங்கள் என மாணவர் சங்கம் கூறியுள்ளது. இல்லையெனில் நீங்கள் வேலையை விட்டு வெளியேற வேண்டியிருக்கும், "என அவர்கள் கூறியதாக ஷிரின் தெரிவித்தார். பர்தா அணிவதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, ஆனால் அதை எனது சொந்த விருப்பப்படி செய்வேன் என்று கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News