Kathir News
Begin typing your search above and press return to search.

உலகில் சிறந்த நகரங்களின் பட்டியலில் டெல்லிக்கு எத்தனாவது இடம்?

உலகில் சிறந்த நகரங்களின் பட்டியலில் டெல்லிக்கு எத்தனாவது இடம்?

உலகில் சிறந்த நகரங்களின் பட்டியலில் டெல்லிக்கு எத்தனாவது இடம்?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 Nov 2020 10:10 PM IST

உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் தலைநகரான புதுடெல்லி 62வது இடத்தை பிடித்துள்ளது. கனடாவை தலைமையிடமாக கொண்ட ரிசோனன்ஸ் கன்சல்டன்சி லிமிடெட் (RSL) நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள 2021ம் ஆண்டின் சிறந்த நகரங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த தரவரிசையானது, இடத்தின் தரம், நற்பெயர் மற்றும் முக்கியத்துவம் பெற்ற அதிக திறமையானவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக தலைவர்கள் உள்ளிட்ட மக்களின் உணர்வுகளின் அடிப்படையிலான போட்டிக்கான அடையாளம் கொண்ட உலகளாவிய நகரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு சிறந்த நகரங்களைப் பட்டியலிட்டுள்ளது. எனவே தற்போது அந்த நிறுவனம் தன்னுடைய கணிப்பின்படி உலகில் சிறந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ரிசோனன்ஸ் கன்சல்டன்சி லிமிடெட் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் 5 இடங்களை லண்டன், நியூயார்க், பாரீஸ், மாஸ்கோ மற்றும் டோக்கியோ ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. இதில், இந்தியாவின் டெல்லி 62வது இடம் பிடித்துள்ளது. உலகம் முழுவதிலும் சிறந்த 100 நகரங்களில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நகரம் என்ற பெருமையை டெல்லி பெற்றுள்ளது. கடந்தாண்டு இந்த பட்டியலில் 81வது இடத்தில் டெல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News