Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வந்தவுடன் யாருக்கு முன்னுரிமை? வெளியானது அரசின் அதி முக்கிய முடிவு!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வந்தவுடன் யாருக்கு முன்னுரிமை? வெளியானது அரசின் அதி முக்கிய முடிவு!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வந்தவுடன் யாருக்கு முன்னுரிமை? வெளியானது அரசின் அதி முக்கிய முடிவு!
X

Muruganandham MBy : Muruganandham M

  |  19 Dec 2020 12:30 PM IST

கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தில் 50 வயதிற்கும் குறைவான, அதே நேரம் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த வகையில் சுமார் ஒரு கோடி பேருக்கு முதற்கட்டமாக போடப்படும் என கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தின் முதல் கட்டத்தில் இந்தியா 1.4 பில்லியன் டாலர் முதல் 1.8 பில்லியன் டாலர் வரை செலவிட வேண்டியிருக்கும்.

அமெரிக்காவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிக உயர்ந்த கொரோனா வைரஸ் பாதிப்பை கொண்ட இந்தியா, அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களில் 300 மில்லியன் மக்களை தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது. இது அஸ்ட்ராஜெனெகா, ரஷ்யாவின் ஸ்பூட்னிக், ஜைடஸ் காடிலா மற்றும் இந்தியாவின் சொந்த பாரத் பயோடெக் ஆகியவற்றின் தடுப்பூசிகளைக் கொண்டு மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் மதிப்பாய்வு செய்த படி, கொரோனா முதல் அலையில் 600 மில்லியன் ஷாட்கள் தேவைப்படும் முக்கியமான தொழிலாளர்கள் மற்றும் கொரோனாவால் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி தேவைப்படுகிறது.

அடுத்து, கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தில் 50 வயதிற்கும் குறைவான, அதே நேரம் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

எனவே, தடுப்பூசி திட்டத்திற்கான தேசிய நிபுணர் குழுவின் கீழ் இதற்காக தனியாக ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது. அடுத்த மாத இறுதியில் துவங்க உள்ள தடுப்பூசி திட்டத்தில் இவர்களை தவிர, ஒரு கோடி மருத்துவ பணியாளர்கள், 2 கோடி முன்கள பணியாளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட 26 கோடி பேர் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News