ஏன் எனக்கு திரௌபதி முர்மு என பெயர் வந்தது? அவரே கூறிய சுவாரஸ்ய தகவல்
புதிய ஜனாதிபதிக்கு திரௌபதி முர்மு எனப் பெயர் வைத்தது யார் என அவரே வெளியிட்ட தகவல்.

By : Mohan Raj
புதிய ஜனாதிபதிக்கு திரௌபதி முர்மு எனப் பெயர் வைத்தது யார் என அவரே வெளியிட்ட தகவல்.
புதிய ஜனாதிபதி திரௌபதி முர்மு'வின் பெயரில் உள்ள 'திரௌபதி முர்மு' மகாபாரதத்தில் உள்ள முக்கியமான கதாபாத்தித்தின் பெயர் ஆகும். இந்த பெயர் அவருக்கு எப்படி வந்தது என்ற தகவலை அவர் ஏற்கனவே வெளியிட்டு இருந்தார்.
ஒடியா மொழி பத்திரிகை ஒன்று அவரை சில மாதங்களுக்கு முன்பு பேட்டி கண்டிருந்தபோது அவர் கூறியிருந்த தகவல் :-
எங்கள் சந்தாலி கலாசாரத்தில் பெயர்கள் மறையாது.ஏனெனில் ஒரு பெண் குழந்தை பிறந்தால் அதன் பாட்டியின் பெயரோ, ஆண் குழந்தை பிறந்தால் அதன் தாத்தாவின் பெயரோ வைக்கப்படும். அந்த வகையில் எனது சந்தாலி பெயர் 'புடி' ஆகும். திரவுபதி என்பது எனது ஆசிரியர் வைத்த பெயர் ஆகும். அதுவும் மற்றொரு மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியரால் கிடைத்தது. எனது இயற்பெயரை அவர் விரும்பவில்லை.
எனவே எனது பெயரை மாற்றிவிட்டார்.இவ்வாறு திரௌபதி முர்மு கூறினார். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 'துடு' என்ற குடும்பப்பெயரைக் கொண்டிருந்த திரவுபதி ,வங்கி அதிகாரியான சியாம் சரண் துடுவை மணந்த பிறகு,முர்மு என்ற பெயரைப் பயன்படுத்த தொடங்கி உள்ளார்.
