Kathir News
Begin typing your search above and press return to search.

மகளிர் தினத்தில் பெண் காவலர்களுக்கு விடுமுறை.. செல்போன் வாங்க 10 சதவீதம் தள்ளுபடி: முதலமைச்சர் அதிரடி உத்தரவு.!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வருகின்ற 8ம் தேதி மகளிர் காவலர்களுக்கு விடுமுறை அளித்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், செல்போன் வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடி எனவும் அரசு சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மகளிர் தினத்தில் பெண் காவலர்களுக்கு விடுமுறை.. செல்போன் வாங்க 10 சதவீதம் தள்ளுபடி: முதலமைச்சர் அதிரடி உத்தரவு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  6 March 2021 10:44 AM IST

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வருகின்ற 8ம் தேதி மகளிர் காவலர்களுக்கு விடுமுறை அளித்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், செல்போன் வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடி எனவும் அரசு சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இவை அனைத்தும் மகளிரை பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இது போன்ற உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

மகளிர் தினத்தன்று பெண்கள் பாதுகாப்பு 'திஷா செல்போன்' செயலியை பதிவிறக்கம் செய்யும் பெண்கள் வாங்கும் செல் போன்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என ஆந்திர அரசு கூறியுள்ளது. அது மட்டுமின்றி ஆந்திர மாநிலம் முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி பெண்களை கவுரவிக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இது போன்று பெண்களை கவுரப்படுத்துவதும் மட்டுமின்றி, அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு உரிய முக்கியத்துவத்தை அளித்து அவர்களையும் சமமாக நடத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும் ஆகும். விரைவில் இந்தியாவில் சாத்தியமாகும் என்பது மாற்றுக்கருத்தில்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News