இந்தியாவின் ஆயுர்வேதத்தை நோக்கி உலகம் திரும்புகிறது: பிரதமர் மோடி பெருமிதம்!
உலகம் இந்தியாவின் ஆயுர்வேதத்தை நோக்கி திரும்பி கொண்டிருப்பதாக பிரதமர் பெருமிதம்.
By : Bharathi Latha
கோவாவில் அகில இந்திய சர்வதேச நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டார். தேசிய யுனானி மருத்துவ நிறுவனம் மற்றும் டெல்லியில் உள்ள பாலாஜியில் உள்ள தேசிய ஹோமியோபதி நிறுவனம் ஆகிய மூன்று சர்வதேச ஆயுஸ் நிறுவனங்களை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அதன் பின்னர் விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் என்பது சிகிச்சை மட்டுமில்லாத ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
யோகா மற்றும் ஆயுர்வேதம் உலகிற்கு புதிய நம்பிக்கை ஆயுர்வேதத்தில் முடியும் விளைவும் எங்களிடம் இருந்தது. ஆனால் சான்றுகள் அடிப்படையில் நாங்கள் பின் தங்கி இருந்தோம். எனவே இன்று நாம் பல்வேறு புள்ளி விவரங்கள் அடிப்படையான ஆதாரங்களை ஆவணப்படுத்த வேண்டும். இந்த மூன்று நிறுவனங்கள் ஆயுசு சுகாதார அமைப்பிற்கு வேகம் கொடுக்கும்.
சுமார் 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுர்வேத சிகிச்சை முறைக்கு பாரம்பரிய மருத்துவ முறையை அங்கீகரித்து இருக்கிறார்கள். மற்ற நாடுகளிலும் ஆயுர்வேதத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும். ஆயுர்வேதம் சரியான வாழ்க்கை முறை நமக்கு கற்பிக்கிறதாகவும் அவர் கூறுகிறார். மேலும் மன மற்றும் உடல் அளவிலும் எப்படி பேணுவது? என்பதற்கு வழிகாட்டியாகவே ஆயுர்வேதம் திகழ்கிறது. ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்று எதிர்காலத்தை உலகுக்கு முன் வைத்து உள்ளோம். இதன் பொருள் ஆரோக்கியத்திற்கான உலகளாவிய பார்வை என்று கூறியிருந்தார்.
Input & Image courtesy: Maalaimalar