Kathir News
Begin typing your search above and press return to search.

கோவாக்சினுக்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம்: டாக்டர் அரோரா உறுதி.!

டெல்டா வைரஸாக உருவெடுக்கும் கொரோனா தொற்றுக்கு எதிராகவும் 65 சதவீதத்திற்கு மேல் கோவாக்சின் பயன் அளிப்பதாக பாரத் பயோடெக் அறிவித்துள்ளது தற்போது மிகப்பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது எனக் கூறியுள்ளார்.

கோவாக்சினுக்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம்: டாக்டர் அரோரா உறுதி.!
X

ThangaveluBy : Thangavelu

  |  4 July 2021 9:15 AM IST

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் கொரோனா தடுப்பூசி, 3வது கட்ட தரப்பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக, தேசிய தடுப்பூசி ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா உறுதியளித்துள்ளார்.





கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் கோவாக்சின் செயல்திறன் 77 புள்ளி 8 சதவீதம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் அரோரா, இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள் வெளிநாடுகளுக்குத் தடையின்றி பயணம் மேற்கெள்வதற்கு இந்த முடிவுகள் உதவும் எனக் கூறினார்.




மேலும், டெல்டா வைரஸாக உருவெடுக்கும் கொரோனா தொற்றுக்கு எதிராகவும் 65 சதவீதத்திற்கு மேல் கோவாக்சின் பயன் அளிப்பதாக பாரத் பயோடெக் அறிவித்துள்ளது தற்போது மிகப்பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது எனக் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News