Kathir News
Begin typing your search above and press return to search.

திருப்தி தராத பதில்கள் - 5'வது நாளில் நள்ளிரவு வரை அமலாக்கத்துறை விசாரணையில் ராகுல் காந்தி

நேற்று ராகுல்காந்தி மத்திய அமலாக்கத் துறையினரிடம் மட்டும் 12 மணி நேர விசாரணையில் ஆஜரானார்.

திருப்தி தராத பதில்கள் - 5வது  நாளில் நள்ளிரவு வரை அமலாக்கத்துறை விசாரணையில் ராகுல் காந்தி

Mohan RajBy : Mohan Raj

  |  22 Jun 2022 1:45 AM GMT

நேற்று ராகுல்காந்தி மத்திய அமலாக்கத் துறையினரிடம் மட்டும் 12 மணி நேர விசாரணையில் ஆஜரானார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் இயக்குனராக உள்ள யங் இந்தியா நிறுவனம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கடந்த 2010ஆம் ஆண்டு வாங்கியது இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றதாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணைக்காக தலைநகர் டெல்லியில், அப்துல்கலாம் சாலையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஏற்கனவே நான்கு நாள் விசாரணைக்கு ஆஜரானார், இந்த நிலையில் அவர் அளித்த பதில்கள் திருப்தி அளிக்காத காரணத்தினால் நேற்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டது.



நேற்று 5-வது நாளாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜரான ராகுல்காந்தி 12 மணிநேரம் விசாரணைக்காக அங்கு இருந்தார், பின்னர் இரவு 9 மணிக்கு இரவு உணவுக்காக அவன் ராகுல் காந்தி வீட்டுக்கு சென்றார். அதன் பின்னர் மீண்டும் சென்று விசாரணையில் கலந்து கொண்டார். இரவிலும் ராகுல் காந்தியுடன் துருவித்துருவி விசாரணை நடைபெற்றதாக அமலாக்கத் துறை அதிகாரிகள்.

பின்னர் விசாரணை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பினார் ராகுல் காந்தி.


Source - Maalai Malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News