சனாதன தர்மம் நழுவாமலும் ,பன்முகத்திறமை கொண்ட இவரது பெயரை கேட்டாலே குற்றவாளிகள் நடுங்குகின்றன யோகியின் நேர்மையை யாரும் சந்தேக பட முடியாது ! - ராஜ்நாத் சிங்.
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பற்றி ராணுவ அமைச்சர் கூறிய கருத்துக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
By : Dhivakar
உத்தர பிரதேச மாநிலம் இந்தியாவிலுள்ள மாநிலங்களில் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. சமூகம்,பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சட்டம் ஒழுங்கு போன்ற எல்லா நிலைகளிலும் உத்தரபிரதேச மாநிலத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் மிளிர வைத்துள்ளார்.
சமீபத்திய நடவடிக்கையான மதுரா பகுதியில் இறைச்சி மற்றும் சாராய விற்பனைக்கு தடை விதித்தார் இந்த நடவடிக்கை சட்ட ஒழுங்கின் மீதும் கலாச்சார மேம்பாட்டிற்கும் அவர் எத்தகைய கவனத்தை செலுத்துகிறார் என்பதை காட்டுகிறது. புண்ணிய பூமியான உத்தரபிரதேசத்தில் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கும் யோகி ஆதித்தியநாத்தை நாட்டில் உள்ள அனைத்து இந்துக்களும் நினைத்துப் பெருமை கொள்கின்றனர்.
இத்தகைய நிலையில் உத்தரபிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் நகரில் நிறுவப்பட்டுள்ள அவதியநாத் சிலையை ராணுவ அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் நேற்று திறந்துவைத்தார். அவர் பேசியதாவது : உத்திரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தின் குரு அவதியநாத். அவர் காட்டிய பாதையில் சனாதன தர்மம் நழுவாமல் ஆதித்தியநாத் செயல்படுகிறார் பன்முகத்திறமை கொண்ட இவரது பெயரை கேட்டாலே குற்றவாளிகள் நடுங்குகின்றன.யோகியின் நேர்மை குறித்து யாரும் சந்தேகப்பட முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பற்றி ராணுவ அமைச்சர் கூறிய கருத்துக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Image : Deccan Herald, Republic World