Kathir News
Begin typing your search above and press return to search.

உத்தரபிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இன்று பதவியேற்பு: பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு!

உத்தரபிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இன்று பதவியேற்பு: பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு!

ThangaveluBy : Thangavelu

  |  25 March 2022 2:33 AM GMT

உத்தரபிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இன்று (மார்ச் 25) 2வது முறையாக பதவியேற்றக உள்ளார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 403 தொகுதிகளில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 273 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியில் அமர உள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இன்று (மார்ச் 25) யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். இதற்கான அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்கிறார். இவருக்கு ஆளுநர் ஆனந்தி பென் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

இதில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக நிர்வாகிகள், முதலமைச்சர்கள் பலர் பலந்து கொள்ள உள்ளனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News