ஆக்சிஜன் பற்றாக்குறை என்று வதந்தி பரப்பினால் சொத்துக்கள் பறிமுதல்.. முதலமைச்சர் அதிரடி உத்தரவு.!
நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது என்று யாராவது வதந்தி பரப்பினால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

By : Thangavelu
நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது என்று யாராவது வதந்தி பரப்பினால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாக பல செய்தி ஊடகங்கள் கருத்து வெளியிட்டு வருகிறது. இது போன்று ஆதாரமின்றி செய்திகளை வெளியிடுவதால், மக்கள் மிகவும் அச்சத்திற்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்து விட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியது.
இது குறித்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறும்போது: மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது என்று யாராவது வதந்தி பரப்பினால், அவர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
