சட்ட விரோத மதமாற்றம் 291 வழக்கு, 507 பேர் கைது: சாட்டையை சுழற்சி யோகி அரசாங்கம்!
சட்டவிரோதமாக 291 மதமாற்ற வழக்குகளின் கீழ் 507 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறது.
By : Bharathi Latha
யோகி தலைமையிலான உத்திரபிரதேச அரசு, இரண்டு ஆண்டுகளில், 291 சட்டவிரோத மதமாற்ற வழக்குகளில், 507 பேரை கைது செய்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சட்ட விரோதமாக மதமாற்றத் தடைச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. நவம்பர் 2020 முதல் உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோத மத மாற்றத் தடைச் சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து இதுவரை 291 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட பின்னர் 507 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மாநில அரசு அளித்த தகவல்களின்படி, இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 291 முதல் தகவல் அறிக்கைகளில் (FIR) இதுவரை குற்றம் சாட்டப்பட்ட 507 பேரிடம் மொத்தமுள்ள 291 வழக்குகளிலும் போடப்பட்டு இருக்கிறது. கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி, மொத்தமுள்ள 291 வழக்குகளில் 150 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாக்கு மூலங்களில், தாங்கள் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இந்தச் சட்டத்தின் கீழ் பெரும்பாலான வழக்குகள் பரேலி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், பரேலியில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் சரியான எண்ணிக்கை உடனடியாக கிடைக்கவில்லை. உத்தர பிரதேசத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை மதம் மாற்றும் மோசடியும் அம்பலமானது. குறிப்பாக கிறிஸ்தவ மிஷனரிகள் மாற்றுத்திறனாளிகளை கூட தங்கள் மதத்திற்கு மாற்றுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கட்டாய மதமாற்றம் தொடர்பான வழக்குகள் இதற்கு முன்னரும் பிற சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால் நவம்பர் 27, 2020 முதல் அமலுக்கு வந்த இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, சட்டவிரோத மதமாற்றங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Input & Image courtesy: The Print