நீங்க தொழுகை நடத்துங்க, நாங்க ஹனுமான் சாலிசா பாடுறோம் - மத்திய பிரதேச வணிக வளாகத்தில் நடந்த போராட்டம்

By : Mohan Raj
வணிக வளாகத்தில் தொழுகை நடத்த எதிர்ப்பு தெரிவித்து அனுமான் சாலிசா பாடிய பஜ்ரங் தன் அமைப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த வணிக வளாகத்துக்கு சிலர் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர், இந்த சம்பவம் தொடர்பாக கேள்விப்பட்ட பஜ்ரங் தல் அமைப்பினர் சிலர் வணிக வளாகத்துக்குள் வந்து தொழுகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொழுகை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுமான் சாலிசாவை பாடுவோம் என வாக்குவாதம் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போராட்டக்காரர்களில் தலைமை தாங்கிய அபிஜித் சிங் ராஜ்புத் கூறுகையில், 'வணிகவனாகத்தில் ஒரு மாதமாக தொழுகை நடத்துவதாக எங்கள் தகவல் வந்து இங்கு வந்து தொழுகை நடத்தும் 12 பேரை பிடித்துள்ளோம் இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது அதனால் நாங்கள் இந்த அனுமான் சாலிசா பாடும் போராட்டத்தை அறிவித்தோம்' என்றார்.
