இனி உரங்களுக்கு தனி பெயர் கிடையாது, 'ஒரே தேசம், ஒரே உரம்' - வருகிறது பாரத் உரம்
'ஒரே தேசம் ஒரே உரம்' என்கின்ற விதியின் அடிப்படையில் பாரத் பிராண்ட் என்கின்ற உரம் வருகிறது என மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

By : Mohan Raj
'ஒரே தேசம் ஒரே உரம்' என்கின்ற விதியின் அடிப்படையில் பாரத் பிராண்ட் என்கின்ற உரம் வருகிறது என மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் உரங்களுக்கு பிராண்டுகளில் ஒரே மாதிரி தன்மையை கொண்டு வரும் நோக்கில் அனைத்து நிறுவனங்களுடன் தங்களின் வேளாண் இடுப்பொருட்களை 'பாரத்' என்ற ஒற்றைப் பேரில் வெளியிட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் படி அனைத்து உரப்பைகளிலும் அது டி.ஏ.பி, அல்லது எம்.ஓ.பி அல்லது என்.பி.கே என எந்த உரமாக இருந்தாலும், பாரத் யூரியா, பாரத் டி.ஏ.பி, பாரத் எம்.ஓ.பி, பாரத் என்.டி.கே என குறிப்பிட வேண்டும் என தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் 'பிரதம மந்திரி பாரதிய ஜனதா பி.எம் பி.ஜே.பி' PMBJP என்ற திட்டத்தின் அடையாளமும் எந்த மாநிலத்தின் கீழ் உரம் வழங்கப்படுகிறது என்ற பெயரும் உரத்தின் பையில் இடம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
