Kathir News
Begin typing your search above and press return to search.

வாயிற் கதவுகளை தட்டும் ஸ்டார்ட் அப் வாய்ப்புகள் - இளைஞர்கள் ஏற்க மத்திய அமைச்சர் அழைப்பு!

தங்களின் வீட்டுக் கதவுகளைத் தட்டும் ஸ்டார்ட்-அப் வாய்ப்புகளை இளைஞர்கள் ஏற்க வேண்டும்.

வாயிற் கதவுகளை தட்டும் ஸ்டார்ட் அப் வாய்ப்புகள் - இளைஞர்கள் ஏற்க மத்திய அமைச்சர் அழைப்பு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  30 Jan 2023 2:27 AM GMT

தங்களின் வீட்டுக் கதவுகளைத் தட்டும் ஸ்டார்ட்-அப் வாய்ப்புகளை ஏற்கும் வகையில் இளைஞர்களின் மனநிலையை மாற்ற மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்த்தல், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அழைப்பு விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள கத்துவாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சி.எஸ்.ஐ.ஆர் ஏற்பாடு செய்திருந்த “இளம் ஸ்டார்ட்-அப் மாநாட்டை” தொடங்கி வைத்துப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், அரசு வேலை மனப்பான்மை குறிப்பாக வட இந்தியாவில் ஸ்டார்ட்-அப் கலாச்சாரத்திற்குத் தடையாக உள்ளது என்றார்.


ஸ்டார்ட்-அப் நிறுவனம் தொடங்குவதற்காக வேலையை விட்டு விலகிய இரண்டு பி-டெக் மற்றும் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர் உட்பட தங்களின் அனுபவங்களை விவரித்த நான்கு இளைஞர்களின் வெற்றிக் கதைகளைக் குறிப்பிட்டுப் பேசிய, டாக்டர் ஜிதேந்திர சிங், சி.எஸ்.ஐ.ஆர் மூலம் தாம் முன்னெடுத்த ஊதாப் புரட்சி குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் ஒரு பகுதியாக மாறியதையும் இது நாடு தழுவிய அங்கீகாரத்தையும் புகழையும் பெற்றதையும் சுட்டிக்காட்டினார்.


ஜம்மு காஷ்மீரில் இருந்து உருவான ‘ஊதாப் புரட்சி’ கவர்ச்சிகரமான ஸ்டார்ட்-அப் வழிகளைத் திறந்துள்ளது என்பதையும் ஊதாநிறப் பூவின் நமணப்பொருள் துறையில் நுழைந்தவர்கள் அதன் மூலம் பெரும் செல்வத்தை ஈட்டுகிறார்கள் என்பதையும் டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார். பல இளம் தொழில்முனைவோர் தங்கள் சொந்த ஸ்டார்ட்-அப்களை நிறுவுவதற்காக லாபகரமான பன்னாட்டு நிறுவன வேலைகளை விட்டு வெளியேறுவதைக் காணுகின்ற சில முன்மாதிரியான நிகழ்வுகளை கவனத்தில் கொள்வது அவசியம் என்று அவர் கூறினார். இதில் மகத்தான வாய்ப்புகள் இருப்பதை இந்த இளம் தொழில்முனைவோர் உணரத் தொடங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News