Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவை தொடர்ந்து கேரளாவை மிரட்டும் ஜிகா வைரஸ்.. 15 பேருக்கு தொற்று கண்டுப்பிடிப்பு.!

தென்ஆப்பிரிக்கா வெப்பமண்டல பகுதிகளில் கண்டறியப்படும் ஜிகா வைரஸ், கேரளா மாநிலத்தில் தற்போது கர்ப்பிணிப் பெண்ணுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 14 பேருக்கு இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவை தொடர்ந்து கேரளாவை மிரட்டும் ஜிகா வைரஸ்.. 15 பேருக்கு தொற்று கண்டுப்பிடிப்பு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  9 July 2021 2:50 PM IST

தென்ஆப்பிரிக்கா வெப்பமண்டல பகுதிகளில் கண்டறியப்படும் ஜிகா வைரஸ், கேரளா மாநிலத்தில் தற்போது கர்ப்பிணிப் பெண்ணுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 14 பேருக்கு இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஏ.டி.எஸ்., கொசுக்களால் பரவுகின்ற இந்த ஜிகா வைரஸ் பாதிப்பு முதலில் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. பின்னர் தென்அமெரிக்காவிலும், அதன் பின்னர் வெப்ப மண்டலப் பகுதிகளிலும் கண்டறியப்பட்டது. இந்த நோய் பாதித்த கர்ப்பணிகளுக்கு பிறக்கப் போகும் குழந்தைகளின் தலை, இயல்பாக இருக்கும். குழந்தையின் தலை அளவை விட சிறியதாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி அருகே கேரளா எல்லையில் உள்ள பாறாசாலை பகுதியை சேர்ந்த 24 வயதான கர்ப்பிணி பெண்ணுக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் அவதிப்பட்டு வந்த அந்த கர்ப்பிணிப் பெண் கடந்த புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நடத்திய சோதனையில் அவருக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும், அவருடன் தொடர்பில் இருந்த 14 மாதிரிகளை புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு, மாநில சுகாதாரத்துறை அனுப்பி வைத்துள்ளது. இந்த சோதனை முடிவில் 14 பேருக்கும் ஜிகா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் இன்னும் பலருடன் தொடர்பில் இருந்தார்களா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News