அர்பன் நக்சல் பாதிரியாருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட வாட்டிகன்!
By : Yendhizhai Krishnan
மகாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகானில் 2018ஆம் ஆண்டு நடந்த வன்முறைக்கு சதித் திட்டம் தீட்டியதாக ஸ்டான் சுவாமி என்ற பாதிரியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் ஒரு ஜெசூயிட் பாதிரியார். இவர் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் சேர்ந்து நாட்டில் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கைக் குலைக்கவும் வன்முறையைத் தூண்டவும் சதித் திட்டம் தீட்டியதாக தேசிய புலனாய்வு முகமை குற்றம் சாட்டியுள்ளது.
இவருக்கு ஆதரவாக பல கத்தோலிக்க திருச்சபைகளும் கிறிஸ்தவ அமைப்புகளும் போராட்டம் நடத்தி அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரின. எனினும் கடந்த மார்ச் மாதம் தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சாட்சியங்களின் படி பாதிரியார் ஸ்டேன் சுவாமி, மோகன் என்ற மாவோயிஸ்ட்டுடன் தொடர்பில் இருந்ததாகவும் இருவருக்கும் இடையே 140 இமெயில்கள் வாயிலாக தகவல் பரிமாற்றமும் ₹8 லட்சம் ரூபாய் பணப் பரிமாற்றமும் நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சிறப்பு நீதிமன்றம் ஸ்டான் சுவாமியின் பெயில் மனுவை நிராகரித்தது. ஆனால் ரோமில் உள்ள ஜெசூயிட் க்யூரியா என்ற தலைமையகமோ தேசிய புலனாய்வு முகமையின் அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும் நீதிமன்றத்தின் பேச்சை தாங்கள் கண்டிப்பதாகவும் அறிக்கை விடுத்துள்ளது.
மேலும் பாதிரியார் ஸ்டான் சுவாமியை தொடர்ந்து ஆதரிப்போம் என்றும் 'பாதிக்கப்பட்ட' மக்களுக்காக 'அமைதியான' முறையில் போராடுவோம் என்றும் தெரிவித்துள்ளது. தவறு செய்ததாக நிரூபிக்கப்பட்ட, இந்தியாவின் இறையாண்மையைக் குலைக்க முயன்ற ஒரு பாதிரியாருக்கு கத்தோலிக்கர்களின் தலைமையான வாட்டிகனே ஆதரவு தெரிவித்துள்ளது அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
எனினும் இது தான் ஜெசூயிட் பாதிரியார்களின் இயற்கை என்பதே உண்மை. ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடுகிறோம் என்ற பெயரில் அவர்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றுவதும் அரசாங்கங்களுக்கு எதிராக அவர்களை தூண்டி விடுவதுமே உலகெங்கும் உள்ள ஜெசூயிட் பாதிரியார்களின் நோக்கம். ஆனால் கிறிஸ்தவ அமைப்புகளில் தொடரும் பாலியல் குற்றங்களைக் குறித்து வாயே திறக்காத வாட்டிகன் ஸ்டான் சுவாமி விஷயத்தில் ஆதரவு தெரிவிப்பது எந்த அளவுக்கு பிற நாடுகளின் நிர்வாகத்தில் தலையிடுவதை ஆதரிக்கின்றது என்பதைக் காட்டுவதாகவே அமைந்துள்ளது.