Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா தொடர்பான அவதூறுகளை பரப்பி வரும் செய்தி நிறுவனங்கள் - மக்கள் கடும் கண்டனம்!

கொரோனா தொடர்பான அவதூறுகளை பரப்பி வரும் செய்தி நிறுவனங்கள் - மக்கள் கடும் கண்டனம்!
X

ShivaBy : Shiva

  |  27 April 2021 1:21 PM IST

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் இறப்பவர்களை இழிவுபடுத்தும் விதமாக சில அரசியல் கட்சிகள் அரசியல் செய்துவருவதாக பொதுமக்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பலர் இந்த நோயினால் உயிரிழந்து வருகின்றனர். தினசரி பாதிப்புக்கு உள்ளாகும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

சமீபத்தில் கூட கொரோனா நோய் தொற்றினால் இறந்தவர்களின் உடலை எரிப்பது போன்ற புகைப்படம் வெளியாகி அனைவரது மனதையும் உருக்கியது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவிற்காக பிரார்த்திக்கிறேன் என்ற பதிவை பதிவு செய்திருந்தார்.

இதனை செய்தியாக வெளியிட்ட சன் நியூஸ் தொலைக்காட்சி அவர் பதிவிட்ட பதிவை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை எரிப்பது போல் இருக்கும் புகைப்படத்துடன் சேர்த்து வெளியிட்டிருந்தனர். இதற்கு பல்வேறு தரப்பு மக்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல் செய்தி நிறுவனங்களின் சார்பாக கொரோனா தடுப்பூசி குறித்த அவதூறுகள் அடிக்கடி பரப்பப்பட்டு வருகிறது. அனைவரும் சேர்ந்து ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப தெரிவிக்கும் போது அது மக்களின் மனதில் பதிய தொடங்கிவிடுகிறது.

எனவே இவ்வாறு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக மக்களை திசை திருப்பும் போது நோய் தொற்று தீவிரமடையும் நிலை ஏற்படவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே செய்தி நிறுவனங்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து கொண்டு போலியான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News